இந்தியால யாருகிட்டையுமே இந்த கார் இல்ல... மெக்லாரன் ஜிடி காரை பயன்படுத்தபோகும் முதல் ஆளாக மாறிய பிரபல நடிகர்!
ஒட்டுமொத்த இந்தியாவில் யாரிடமும் இல்லாத ஓர் காரை பிரபல நடிகர் ஒருவர் அவரது கார் கலெக்சனில் இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன வாகனம், அதன் விலை என்ன?, என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் கார்திக் ஆர்யனும் ஒருவர். இவரிடத்தில் எக்கசக்க சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில் அவரின் கார் கலெக்சனில் புதிதாக மெக்லாரன் ஜிடி (McLaren GT) சூப்பர் கார் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இணைப்பின் வாயிலாக இந்தியாவிலேயே மெக்லாரன் ஜிடி காரை பயன்படுத்தும் முதல் நபராக நடிகர் கார்திக் ஆர்யன் மாறியிருக்கின்றார்.

இந்த காரின் விலை ரூ. 3.73 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மத்திய, மாநில அரசுகளின் வரி சேர்க்கப்பட்டால் ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் பல மடங்கு அதிகமானதாகக் காணப்படும். இத்தகைய ஓர் விலையுயர்ந்த காரையே கார்திக் ஆர்யன் தற்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றார். ஆனால், இந்த காரை அவர் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம், இந்த காரை அவர் பரிசாகவே பெற்றிருக்கின்றார். டி-சீரிஸே நடிகர் கார்திக் ஆர்யனுக்கு இந்த மிக மிக அதிக விலைக் கொண்ட காரை பரிசாக வழங்கியிருக்கின்றது. அண்மையில் கார்திக் ஆர்யன் நடிப்பில் வெளிவந்த ஹூல் ஹுலையா 2 படத்திற்கு மக்கள் மத்தியில் பிரமாண்டமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஹூல் ஹுலையா 2, 2022 ஆம் ஆண்டில் இதுவரை வெளி வந்த மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த படம் இந்தியா பாக்ஸ் ஆஃபிஸிஸ் ரூ. 180 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது. இத்தகைய தரமான வெற்றியைத் தொடர்ந்தே டி-சீரிஸின் தலைவர் பூஷன் குமார் சூப்பர் காரை நடிகருக்கு பரிசாக வழங்கினார்.

நம்முடைய பார்வைக்கு வேண்டுமானால் இந்த கார் மிக மிக விலையுயர்ந்ததாக தெரியலாம். ஆனால், மெக்லாரன் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் மலிவு விலை தேர்வாகவே ஜிடி இருக்கின்றது. இதனையே கார்திக் ஆர்யனுக்கு தற்போது டி-சீரிஸ் பரிசாக வழங்கியிருக்கின்றது. மெக்லாரன் ஜிடி ஓர் கிராண்ட் டூரர் ரக காராகும். இந்த காரை கூடுதல் சிறப்பானதாக மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு சில கஸ்டமைசேஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இது காரின் விலையை மேலும் பல மடங்கு உயர்த்த வழி வகுக்கும்.

அதேவேலையில், கார் பயன்பாட்டை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்ற அது உதவும். மெக்லாரன் நிறுவனம் இந்த ஜிடி கார் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாகக 611 பிஎச்பியையும், 630 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனிலேயே இந்த சூப்பரான பவரை ஜிடி வெளியேற்றுகின்றது.

இது ஓர் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் காராகவும் காட்சியளிக்கின்றது. மெக்லாரன் ஜிடி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.2 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இதேபோல், மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை வெறும் 9 செகண்டுகளில் அது எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 327 கிமீ ஆகும்.

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திலேயே மெக்லாரன் ஜிடி இயங்கும். இந்த காரைக் கொண்டு சென்னை-டூ-பாண்டியை ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே அடைந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. டிராஃபிக் இல்லாமல் சாலைகள் காலியாக இருக்கும் எனில் அரை மணி நேரத்திலேயே பாண்டியை சென்றடைந்துவிடலாம். அந்தளவிற்கு அதிக வேகத்தில் செல்லக் கூடிய காரே மெக்லாரன் ஜிடி. ஆனால், இந்த காரின் உச்சபட்ச வேகத்தை சோதித்து பார்க்க இந்திய சாலைகளும் சரி, போக்குவரத்து விதிகளும் சரி, இரண்டுமே அனுமதிக்காது.

கார்திக் ஆர்யன் இடத்தில் ஏற்கனவே பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறியிருந்தோம். அந்தவகையில், அவரிடத்தில் லம்போர்கினி உருஸ் கேப்ஸ்யூல் எடிசன், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மினி கூப்பர் கன்வெர்டபிள், போர்ஷே 718 பாக்ஸ்டர் உள்ளிட்ட மிக மிக விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக மெக்லாரன் ஜிடி பரிசளிப்பின் வாயிலாக இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications