தேர்டு ஹேண்டில் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நடிகர் இப்போ மெக்லாரன் ஜிடி-க்கு சொந்தக்காரர்... யார் அவர்?
ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்குவிக்கும் வகையில் தன்னுடைய கடந்த கால அடித்தட்டு வாழ்க்கை அனுபவத்தை பிரபல திரை நட்சத்திரம் ஒருவர் தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக பகரிந்துள்ளார். அந்த நடிகர் யார், அவர் தற்போது என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அனைவரும் அறியப்படும் நபர்களில் ஒருவராக இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர் கார்த்திக் ஆர்யன் உள்ளர். அதிலும், சமீபத்தில் மெக்லாரன் நிறுவனத்தின் ஜிடி சொகுசு காரை பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பரிசாக பெற்ற பின்னர் அவர் மேலும் பலமடங்கு பிரபலமான நபராக மாறிவிட்டார். இவர் சமீபத்தில் பாலிவுட் ஹங்காமாவிற்கு அளித்த பேட்டியே தற்போது அவரது ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்திருக்கின்றது.

கடந்த காலங்களில், அதாவது, திரை துறையில் சாதனை பயணத்தைத் தொடங்கும் முன்னர் வரை அவர் மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கின்றார். வெளியில் செல்ல வேண்டும் எனில் பொதுப்போக்குவரத்து வாகனங்களையே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். "ஆட்டோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாகனங்களை கடனாக பெற்றே நான் பயணித்தேன்" அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதுமட்டுமின்றி, தான் முதன் முதலில் வாங்கியது ஏற்கனவே மூவரால் உரிமம் கொண்டாடப்பட்ட 'தேர்டு ஹேண்டு' கார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காரை, பியார் கா பன்சநமா, ஆகாஷ் வானி ஆகிய திரைப்படங்களில் தோன்றியதற்கு பின்னரே கார்த்திக் ஆர்யன் வாங்கியிருக்கின்றார். தோராயமாக அக்காரின் விலை ரூ. 65 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகின்றது. "எக்கசக்க சிக்கல்களுக்கு பின்னரே இக்காரை நான் வாங்கினேன்" என்று கார்திக் ஆர்யன் தெரிவித்துள்ளார்.

"இந்த காரை வாங்கும் முன்னர் வரை பொது போக்குவரத்து அல்லது பிறருடைய வாகனங்களை கடனாக பெற்றே நான் அனைத்து விதமான ரெட் கார்பட் நிகழ்வுகளுக்கும் சென்று வந்தேன்" என்று கார்த்திக் கூறியுள்ளார். "வாகனம் கடன் கிடைக்காத நேரங்களில் லிஃப்ட் அல்லது ஆட்டோவிலேயே பயணிப்பேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய அடித்தட்டு மக்கள் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த கார்த்திக் ஆர்யனே, தற்போது ஆடம்பரமான வாழ்க்கைக்கும், விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கும் சொந்தக்காரராக மாறியிருக்கின்றார். அவரிடத்தில் லம்போர்கினி உருஸ் மற்றும் மெக்லாரன் ஜிடி போன்ற மிக மிக விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்துடன், சில விலையுயர்ந்த மோட்டார்சைக்கிளும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் கார்த்திக் ஆர்யனின் திறமைக்கு கிடைத்த பரிசுகள் ஆகும். நடிகரின் இந்த அதீத வளர்ச்சி இந்திய இளைஞர்கள் பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நடிகர் கார்த்திக் ஆர்யன் முதன் முதலில் 2011ம் ஆண்டிலேயே அவரது திரை வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரின் முதல் படம் பியார் கா பன்சநமா ஆகும்.

கார்த்திக் ஆர்யனிடத்தில் உள்ள விலையுயர்ந்த கார்களில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவியும் ஒன்று. இந்த காரை மிக சமீபத்திலேயே அவர் வாங்கினார். இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த உச்சபட்ச விலைக் கொண்ட காரையே கார்திக் ஆர்யன் தனது சொகுசு பயணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்னர் வாங்கினார்.

இந்த சொகுசு காரில் கூடுதல் தொகையைச் செலுத்தி 'எம்எச் 02 எஃப்என் 9595' எனும் பேன்சி பதிவெண்ணை கார்த்திக் ஆர்யன் பொருத்தியுள்ளார். உருஸ் எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, வெறும் 3.6 செகண்டுகளிலேயே மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை அது எட்டிவிடும்.

இதேபோல் இந்தியாவிலேயே மெக்லாரன் ஜிடி சொகுசு காரை பயன்படுத்தும் முதல் நபராகவும் கார்த்திக் ஆர்யன் இருக்கின்றார். இக்காரை 'ஹூல் ஹுலையா 2' படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை அடுத்து தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பரிசாக வழங்கியது. மெக்லாரன் ஜிடி சொகுசு காரின் விலை ரூ. 3.73 கோடி ஆகும். 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாகக 611 பிஎச்பியையும், 630 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனிலேயே இந்த சூப்பரான பவரை ஜிடி வெளியேற்றுகின்றது. இது ஓர் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் காராகவும் காட்சியளிக்கின்றது. மெக்லாரன் ஜிடி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.2 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இதேபோல், மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை வெறும் 9 செகண்டுகளில் அது எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 327 கிமீ ஆகும்.
Source: Bollywood Hungama


Click it and Unblock the Notifications