1கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புது காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்.. அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற பெண்மணிக்கு பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் அதன் புகழ்பெற்ற ஐ20 (Hyundai i20) கார் மாடலை பரிசாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

இந்தியாவின் பிரபலமான டிவி ஷோக்களில் கேபிசி (Kaun Banega Crorepati 2022)-யும் ஒன்று. இது ஓர் வினாடி வினா நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கோலாப்பூரைச் சேர்ந்த கவிதா சாவ்லா ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்று, நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கின்றார். இதன் வாயிலாக தற்போதைய சீசன் 14இல் ஒரு கோடி ரூபாய் பரிசுடன் வெளியேறும் முதல் ஆள் என்ற புகழை அவர் அடைந்திருக்கின்றார்.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

இவரை கவுரவிக்கும் விதமாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் அதன் ஐ20 ஹேட்ச்பேக் காரை பரிசாக வழங்கியிருக்கின்றது. இந்த காருக்கான பரிசுக் கூப்பனையும் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனே கவிதா சாவ்லாவுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கினார். இவரே கேபிசி சீசன் 14இன் தொகுப்பாளார் ஆவார்.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

ரூ. 7.5 கோடி பரிசுத் தொகைக்கான கேள்விக்கு பதில் தெரியாத காரணத்தினால், புத்திச்சாலிதனமாக ரூ. 1 கோடிக்கான பதிலை கவிதா தேர்வு செய்தார். அதற்கான சரியான பதிலை கூறி, ஒரு கோடி ரூபாயை வென்றதுடன், கூடுதலாக ஹூண்டாய் ஐ20 காரையும் அவர் வென்றார். ரூ. 7.5 கோடிக்கான விளையாட்டை தேர்வு செய்து, அதில் வெற்றி பெற்றிருந்தால் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அவர் பரிசாக பெற்றிருப்பார். ஆனால், துரதிரஷ்டவசமாக அந்த வாய்ப்பை கவிதா தவறவிட்டுவிட்டார்.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் இதுவாகும். அதிக பரீமியம் அம்சங்கள் கொண்ட எஸ்யூவி ரக காராக கோனா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 23,84,000 ஆகும். இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இத்தகைய சூப்பரான காரையே நூலிழையில் கவிதா தவறவிட்டிருக்கின்றார்.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

அதேவேலையில், நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்மிக்க கார் மாடலே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஐ20 காரே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதில், பிரீமியம் அம்சங்கள் ஏராளம் என்பதால் இதன் விலையும் சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 7.07 ஆகும். ரூ. 10.99 லட்சம் வரையில் ஐ20 விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். டாடாவின் அல்ட்ராஸ், மாருதியின் பலினோ மற்றும் டொயோட்டாவின் கிளான்ஸா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக ஐ20 இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

ப்ளூலிங்க் எனும் சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் இவ்வாகனம் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது ஓர் கார் இணைப்பு தொழில்நுட்பம் ஆகும். இத்துடன், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், போஸ் சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஆம்பியன்ட் மின் விளக்கு, ஒயர்லெஸ் சார்ஜர் என பன்முக சிறப்பு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களும் ஐ20-இல் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

இதுதவிர, கேபினுள் உள்ள காற்றை வடிகட்டும் திறன் கொண்ட ஏர் ப்யூரிஃபையர், டூயல் ஏர் பேக்குகள், முன்பக்கத்திற்கான சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் சென்சார், அதி-வேக அலர்ட் சிஸ்டம், ஸ்பீடு சென்ஸிங் ஆட்டோ டூர் லாக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு கருவிகளும் ஐ20 காரில் இடம் பெற்றுள்ளன. மேலும், பன்முக எஞ்ஜின் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி கவுரவித்த ஹூண்டாய்... அந்த தருணம் இருக்கே வேற லெவல்!

83 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார், 120 எச்பியை வெளியேற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 100 எச்பி திறனை வெளியேற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் என ஒட்டுமொத்தமாக மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்துடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களும் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kbc contestant kavita chawla won rs 1 crore prize brand new hyundai i20 hatchback
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X