முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்.. இந்த காருல போறதே தெரியாது! கப்பல் மாதிரி இருக்கும்!

முன்னதாக டாடா ஹாரியர் கார் வாங்குவதாக பிளான் போட்டிருந்த நிலையில் அந்த காரை ஒதுக்கிவிட்டு கியா கார்னிவல் (Kia Carnival) சொகுசு காரை முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க ஓர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அது எந்த மாநில அரசு?, காரின் சிறப்பு வசதிகள் என்ன?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை உயர்ந்த எம்பிவி ரக கார்களில் கிய கார்னிவல் (Kia Carnival)-ம் ஒன்று. இந்த காரையே தங்கள் முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க ஓர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவே அந்த மாநில அரசாகும். முன்னதாக டாடா ஹாரியர் எஸ்யூவி காரையே முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க கேரள அரசு திட்டமிட்டிருந்தது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

இந்த நிலையிலேயே டாடா ஹாரியர் காரை வாங்கும் திட்டத்தை கை விட்டுவிட்டு தற்போது கியா கார்னிவல் எம்பிவி காரை வாங்க அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கின்றது. இந்த வாகனத்தை (கியா காரை) வழக்கமான எம்பிவி காருடன் ஒப்பிட்டு அதனை குறுகலான பார்வையோடு பார்க்க வேண்டாம். ஏனெனில், இந்த காரில் சொகுசு மற்றும் பிரீமியம் தர அம்சங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்த காரில் பயணிக்கும் போது காருக்குள் பயணிக்கின்ற அனுபவத்திற்கு பதிலாக உல்லாச கப்பலில் பயணிப்பதற்கு இணையான அனுபவமே கிடைக்கும். இந்தளவிற்கு மிக தரமான சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவே கியா கார்னிவல் உள்ளது. இதனாலயே பலரின் பிரியமான வாகனமாக கார்னிவல் எம்பிவி காட்சியளிக்கின்றது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

குறிப்பாக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் மற்றும் மோலிவுட் என அனைத்து திரையுலகினரின் விருப்பமான காராக அது காட்சியளிக்கின்றது. திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி தமிழ் பாடகர் சங்கர் மஹாதேவன், பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த மியூசிக் டைரக்டர் சோனு நிகம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா உள்ளிட்டோரும் இந்த வாகனத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

இத்தகைய ஓர் வாகனத்தையே முதலமைச்சர் பினராயி விஜயனின் பயன்பாட்டிற்கு வாங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரளா அரசு தற்போது பெரும் நிதி நெருக்கடியில் தற்போது சிக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அரசு இதுபோன்ற ஆடம்பர கொள்முதலை மேற்கொள்வதாக அம்மாநிலத்தின் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

தெலங்கானா மாநில அரசுகூட அண்மையில் அதன் கலெக்டர்களின் பயன்பாட்டிற்காக 30க்கும் மேற்பட்ட கியா கார்னிவல் கார்களை வாங்கியிருந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஓர் மிகப் பெரிய கொள்முதல் ஆகும். இந்த நிலையிலேயே முதலமைச்சர் பினராயி விஜயனின் பன்பாட்டிற்காக கியா கார்னிவல் காரை தேர்வு செய்திருக்கின்றது அம்மாநில காவல்துறை.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

அனில் காந்த் இவரே இக்காரை தேர்வு செய்திருக்கின்றார். கியா கார்னிவலுடன் சேர்த்து மூன்று இன்னோவா க்ரிஸ்டா கார்களையும் வாங்க முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்த இன்னோவா க்ரிஸ்டா கார்கள் எஸ்கார்ட் வாகனங்களாகப் பயன்படுத்தப்படும் என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

கியா கார்னிவலை பொருத்த வரை அதன் உயர்நிலை வேரியண்டை வாங்கவே அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், இன்னோவா க்ரிஸ்டாவில் 2.4 இசட் வெரியண்ட் ஒன்றும், ஜி பிளஸ் வேரியண்ட் இரண்டும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்தும் பாதுகாப்பு மற்றும் சொகுசான பயணத்திற்கு உகந்த வாகனமாக இருக்கின்றது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

தற்போது முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வ வாகனமாக கருப்பு நிற டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். விரைவில் இந்த வாகனம் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு புதிய கியா கார்னிவல் கார்கள் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

அதுமட்டுமல்ல அதை பராமரிப்பதும் சுலபம். குறிப்பாக குறைவான பராமிரப்பு செலவையே அது வழங்கும். எனவேதான் இந்திய மாநிலங்கள் பலவற்றின் அதிகாரப்பூர்வ வாகனமாக இன்னோவா க்ரிஸ்டா இருக்கின்றது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ரூ. 17.86 லட்சம் தொடங்கி ரூ. 25.68 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதைவிட பல மடங்கு அதிக விலைக் கொண்டதாக கியா கார்னிவல் இருக்கின்றது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

இந்த பிரீமியம் தர எம்பிவி காரின் ஆரம்ப விலையே ரூ. 29.99 லட்சம் தொடங்கி ரூ. 34.99 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆடம்பர வசதிகள் நிறைந்த வாகனம் என்பதால் இத்தகை உச்சபட்ச விலையில் கார்னிவல் விற்கப்படுகின்றது.

முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்... அட இவ்ளோ சூப்பரான வாங்க போறாங்களா? கப்பல் மாதிரி இருக்குமே!

Source: News9live

எலெக்ட்ரிக் ஸ்லைடிங் டூர், மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், ட்வின் சன்ரூஃப், பின் பக்க இருக்கைகளுக்கும் திரை, தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி ஃபங்க்சன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், கார் இணைப்பு அம்சம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 2, 2022, 20:07 [IST]
English summary
Kerala govt chooses kia carnival as cm s officical vehicle
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+