காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு.. தரமான காரை வாங்கிய கேஜிஎஃப் ஆக்டர் அவினாஷ்!

கேஜிஎஃப் திரைப்பட நடிகர் பிஎஸ் அவினாஷ் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கியிருக்கும் இந்த ஆடம்பர காரின் விலை, சிறப்புகள் மற்றும் பிற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

ஓர் வில்லன் மிகவும் கொடூரமானவன் என்பதை அவனின் அறிமுகத்திற்கு முன்னரே தன்னுடைய அசாத்திய நடிப்பால் வெளிக்காட்டும் திறன் கொண்டவர், பிஎஸ் அவினாஷ். இவரின் இந்த மிக சிறந்த நடிப்பிற்கு கேஜிஎஃப் திரைப்படமே சான்று. பத்து பேர் வந்தாலும் சமாளிக்க முடியும் எனக் காட்டக் கூடிய மாஸான உடல்வாகைக் கொண்டிருக்கும் இவர், வில்லன் தன்னை விட பல மடங்கு பலசாலி என்பதை தனது முக பாவனை வாயிலாகவே அப்படத்தில் காண்பித்திருப்பார்.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

இத்தனையான மிக சிறந்த நடிப்பிற்கு பெயர்போன பிஎஸ் அவினாஷ், தற்போது தன்னைப் போலவே பல மடங்கு அதிக கட்டுமஸ்தான மற்றும் பிரமாண்ட தோற்றம் கொண்ட ஓர் சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்களில் ஒன்றான எக்ஸ்5 40ஐ (X5 40i) மாடலையே அவர் வாங்கியிருக்கின்றார்.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

இந்த புதிய சொகுசு கார் கொள்முதலை அவினாஷ் சங்கீதா அவருடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். இருவரும் இணைந்து சென்று பிஎம்டபிள்யூ எக்ஸ்5 40ஐ சொகுசு காரை டெலிவரி எடுக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். காருக்கு மேட்சாக கருப்பு நிற சட்டை அணிந்து சென்று அக்காரை டெலிவரி பெற்றிருக்கின்றார், பிஎஸ் அவினாஷ். ஆமாங்க, கருப்பு நிறத்திலான எக்ஸ்5 40ஐ காரையே அவர்கள் வாங்கியிருக்கின்றனர்.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

அவினாஷ் சங்கீதா வெளியிட்டிருக்கும் இந்த படங்கள் தற்போது இன்ஸ்டாவிலும் பிற சமூக வலைதளங்களிலும் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இருவரையும் திரைநட்சத்திரங்களும், அவினாஷின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எக்ஸ்5 சொகுசு கார் மாடலை ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட் (X5 xDrive40i M Sport), எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 40ஐ ஸ்போர்ட்எக்ஸ் பிளஸ் (X5 xDrive40i SportX Plus), எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டி எம் ஸ்போர்ட் (X5 xDrive30d M Sport) மற்றும் எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட்எக்ஸ் பிளஸ் (X5 xDrive30d SportX Plus). ஆகியவையே அவை ஆகும்.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

இதன் ஆரம்ப விலை ரூ. 96,50,000 ஆயிரம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த ஆடம்பர காரையே பிஎஸ் அவினாஷ் தற்போது வாங்கியிருக்கின்றார். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த சொகுசு காரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

ட்வின் பவர் டர்போ 6 சிலிண்டர் டீசல் மற்றும் ட்வின் பவர் டர்போ 6 சிலிண்டர் பெட்ரோல் தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் மோட்டார் வெறும் 5.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 243 கிமீ ஆகும். மேலும், இக்காரில் மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக 8 ஸ்பீடு ஸ்டெப்ரோனிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

இத்துடன் எக்ஸ்டிரைவ், அடாப்டீவ் 2ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் எம் ஸ்போர்ட் பிரேக் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர அதிக பாதுகாப்பை வழங்கும் விதமாக சரவுண்ட் வியூவ் கேமிரா வசதியுடன் கூடிய பார்கிங் அசிஸ்டன்ஸ், ஹெட்-அப் திரை, ரிவர்சிங் அசிஸ்ட், கெஸ்டர் கன்ட்ரோல், ஸ்மார்ட்போன் இணைப்பு என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

காரை டெலிவரி எடுக்கும்போது கூட மனுஷன் விறைப்பாதான் போயிருக்காரு... அவினாஷ் வாங்கியிருக்கும் இந்த காரோட விலை என்ன தெரியுமா?

இதுதவிர இன்னும் சொகுசு வசதிகள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் இந்த பிஎம்டபிள்யூவின் இந்த தயாரிப்பிற்கு இந்திய தொழிலதிபர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே கேஜிஎஃப் திரைப்படத்தில் வரும் வில்லன்களில் ஒருவரான அவினாஷ் வாங்கியிருக்கின்றார்.

Article Published On: Thursday, November 10, 2022, 8:30 [IST]
English summary
Kgf actor bs avinash buys brand new bmw x5 40i luxury car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+