டொயோட்டா இன்னோவா இந்தியாவில் எல்லாருக்கும் பிடிச்ச கார் ஆச்சே... அதுக்கே இப்படி ஒரு நிலைமையா?
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எம்பிவி கார் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் எர்டிகா கார்தான் மிக முக்கியமான காரணம். இந்த சூழலில், எம்பிவி செக்மெண்ட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வீழ்த்தி, கியா கேரன்ஸ் கார் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

நடப்பாண்டின் முதல் அரையாண்டில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடப்பாண்டின் முதல் அரையாண்டில், அதாவது கடந்த ஜனவரி-ஜூன் வரையிலான காலகட்டத்தில், கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 30,953 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 30,551 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வீழ்த்தி, கியா கேரன்ஸ் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமல்லாது, கடந்த ஜூன் மாதமும் கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை, கியா கேரன்ஸ் வீழ்த்தியுள்ளது. கியா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 7,895 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இதே காலகட்டத்தில் டொயோட்டா நிறுவனமோ 6,795 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கணக்கிட்டால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட, 1,100 கியா கேரன்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு, கியா கேரன்ஸ் கார் வலுவான போட்டியாளராக மாறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் கியா கேரன்ஸ் கார், நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தின் மைய பகுதியில்தான், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீமியம், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் ப்ளஸ், லக்ஸரி மற்றும் லக்ஸரி ப்ளஸ் ஆகிய ட்ரிம்களில் கியா கேரன்ஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன், 6 அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. மறுபக்கம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த டீசல் இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் 9.60 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கியா கேரன்ஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.70 லட்ச ரூபாயாக உள்ளது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சௌகரியம், பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு என இந்திய வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஒவ்வொரு அம்சத்திற்கும் கியா கேரன்ஸ் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.

இதுதவிர லேட்டஸ்ட் கியா கனெக்ட் தொழில்நுட்பம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

எனவே கொடுக்கும் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த காராக திகழ்கிறது. சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகள், பல்வேறு கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள், ஏராளமான வசதிகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் ஆகிய காரணங்களால்தான், கியா கேரன்ஸ் காரால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வீழ்த்த முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








