புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்துள்ள கியா கேரன்ஸ் காருக்கு கூரையை பிய்த்து கொண்டு முன்பதிவு கொட்டுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் 2 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக கியா கேரன்ஸ் காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. 2 மாதங்களுக்கு உள்ளாகவே கியா கேரன்ஸ் கார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

கியா கேரன்ஸ் கார் கடந்த 2021ம் ஆண்டே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அதை தொடர்ந்து நடப்பாண்டு பிப்ரவரி 15ம் தேதிதான் கியா கேரன்ஸ் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களை தொடர்ந்து இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 4வது தயாரிப்பு இதுவாகும்.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

இது மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது. கியா கேரன்ஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கு சரிக்கு சமமான வரவேற்பு நிலவுகிறது. சுமார் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் கியா கேரன்ஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்களை முன்பதிவு செய்துள்ள நிலையில், எஞ்சிய 50 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்களை முன்பதிவு செய்துள்ளனர்.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

கடந்த பிப்ரவரி மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 5,300 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. பிப்ரவரி 15ம் தேதிதான் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது எனும் நிலையில், வெறும் 13 நாட்களிலேயே 5,300 கேரன்ஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

இத்தனைக்கும் கார் நிறுவனங்கள் தற்போது செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த பிரச்னை காரணமாக கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையையும் சமாளித்து, மிக குறுகிய நாட்களில் கியா நிறுவனம் இவ்வளவு கேரன்ஸ் கார்களை விற்பனை செய்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

தற்போது முன்பதிவுகள் குவிந்துள்ளதால், வரும் மாதங்களில் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சவாலான விலை நிர்ணயம்தான் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

இந்திய சந்தையில் கேரன்ஸ் காரின் ஆரம்ப விலையை 8.99 லட்ச ரூபாயாக கியா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையை கியா நிறுவனம் 16.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த காருக்கு இது மிக சிறப்பான விலையாக கருதப்படுகிறது.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

கியா கேரன்ஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி 1.5 பெட்ரோல், 1.4 T-GDi பெட்ரோல் மற்றும் 1.5 CRDi VGT டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகளை கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி என 3 கியர் பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

இந்திய சந்தையில் போட்டியாளர்களுக்கு கியா கேரன்ஸ் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கியா கேரன்ஸ் காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடனும் கியா கேரன்ஸ் போட்டியிட்டு வருகிறது.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

ஆனால் கியா கேரன்ஸ் காருடன் ஒப்பிடும்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விலை உயர்ந்த கார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான, அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட்களுக்கு மட்டுமே கியா கேரன்ஸ் கார் போட்டியாக கருதப்படுகிறது.

புக்கிங் குவிகிறது... சூப்பரான விலையில் வந்துள்ள புதிய காரை வாங்க வரிசை கட்டும் மக்கள்... மாருதி கார்கள் காலி

கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, கேரன்ஸ் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கியா கேரன்ஸ் காரின் வெற்றிக்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் காரின் போட்டியை சமாளிப்பதற்காக, மாருதி சுஸுகி எர்டிகா காரின் 2022 மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 17:29 [IST]
English summary
Kia carens bookings cross 50000 mark details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+