இத்தன சூப்பரான எம்பிவி காரோட ஆரம்ப விலை இவ்ளோதானா!.. இன்னோவா க்ரிஸ்டாவிற்கு நிஜமாகவே செம்ம சவால்!
கியா கேரன்ஸ் எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்காரின் விலை குறித்த முக்கிய விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா-வின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நிறுவனம் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், இந்திய சந்தையை அலங்கரிக்கும் விதமாக மிக சமீபத்தில் கேரன்ஸ் (Kia Carens) எனும் புதுமுக எம்பிவி காரை வெளியீடு செய்தது.

கடந்த 2021 டிசம்பர் 16ம் தேதி அன்றே இந்த வெளியீடு நிகழ்வு உலகளவில் செய்யப்பட்டது. கேரன்ஸ் ஓர் எம்பிவி ரக காராகும். கியா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் ஓர் எம்பிவி ரக காரை விற்பனைக்கு வழங்கி வரும் நிலையில் கூடுதல் தேர்வாக அதே பிரிவில் கேரன்ஸ் காரை களமிறக்கயிருக்கின்றது, கியா. இந்த காருக்கும் தற்போது நாட்டில் மிக அமோகான டிமாண்ட் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

கியா கேரன்ஸ் இதுவரை 19,089 புக்கிங்குகளை பெற்றிருக்கின்றது. இக்காரின் விலை எவ்வளவு என்று தெரிவதற்கு முன்னரே இந்தியர்கள் செய்த மிக சிறப்பான புக்கிங் எண்ணிக்கை இதுவாகும். ஆம், இன்றே இக்காரின் விலை பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கேரன்ஸுக்கு அறிமுக விலையாக ரூ. 8.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காரின் உயர்நிலை தேர்வு ரூ. 16.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

கார் அண்ட் ரெனைசேன்ஸ் (Car and Renaissance), அதாவது, கார் மற்றும் மறுமலர்ச்சி இதை குறிக்கும் வகையிலேயே 'கேரன்ஸ்' எனும் பெயரை இக்காருக்கு கியா தேர்வு வைத்திருக்கின்றது. மேலும், இந்த காரையும் தனது முந்தைய தயாரிப்புகளைப் போல் அதிக சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளைத் தாங்கிய வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இது ஓர் மிக சிறந்த பொழுதுபோக்கு வாகனமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய வசதிகள் கொண்ட வாகனத்தையே கியா தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. இந்த பணிகள் மிக அமோகமாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வேலையில், இன்று (பிப்ரவரி 15) கேரன்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது, கியா.

கேரன்ஸ் எம்பிவி ரக வாகனமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த கார் பெருமளவில் எஸ்யூவி கார்களுக்கே போட்டியளிக்கும் வகையில் உள்ளது. அந்தவகையில், நாட்டின் மிக முக்கியமான எஸ்யூவி கார்களாக காட்சியளிக்கும் டாடா சஃபாரி (Tata Safari), மஹிந்திரா 700 (Mahindra XUV700) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) உள்ளிட்ட கார்களுக்கு இதன் வருகை போட்டியாக அமைந்துள்ளது.

இதுமட்டுமின்றி, தான் விற்பனைக்கு வரவிருக்கும் எம்பிவி கார் பிரிவில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta), மாருதி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் எக்ஸ்எல்6 (XL6) உள்ளிட்ட கார்களுக்கும் இதன் வருகை போட்டியாக அமைந்துள்ளது.

கியா கேரன்ஸ் ஆறு மற்றும் ஏழு ஆகிய இரு விதமான இருக்கைகள் தேர்விலும், ஐந்து விதமான வேரியண்டுகள் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும். ஆறு இருக்கை தேர்வானது லக்சூரி ப்ளஸ் ட்ரிம்மில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. அதிக சொகுசு வசதிகளை விரும்புவோர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த உயர்நிலை தேர்வில் மட்டும் ஆறு இருக்கை வழங்கப்பட இருக்கின்றது.

கேரன்ஸ் எம்பிவி ப்ரீமியம் (Premium), ப்ரெஸ்டீஜ் (Prestige), ப்ரெஸ்டீஜ் ப்ளஸ் (Prestige Plus), லக்சூரி (Luxury), லக்சூரி ப்ளஸ் (Luxury Plus) ஆகிய ஐந்து ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து வேரியண்டுகளிலும் ஏழு இருக்கை தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பன்முக நிற விருப்ப தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றது.

அந்தவகையில், இம்பீரியல் ப்ளூ (Imperial Blue), மோஸ் பிரவுன் மற்றும் இன்டென்ஸ் சிவப்பு நிறுத்துடனான ஸ்பார்க்கிளிங் சில்வர் (Moss Brown and Sparkling Silver along with Intense Red), அரோரா பிளாக் பியர்ல் (Aurora Black Pearl), கிராவிட்டி கிரே (Gravity Grey), கிளாசியர் ஒயிட் பியர்ல் (Glacier White Pearl) மற்றும் கிளியர் (Clear White) ஆகிய நிற தேர்வுகளிலேயே கேரன்ஸ் கிடைக்கும்.

கியா கேரன்ஸ் சற்றே முரட்டுத் தனமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இதற்கு அக்காரின் முகப்பு பகுதி ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த முகப்பு பகுதியை அலங்கரிக்கும் விதமாக எல்இடி ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே எல்இடி தரத்திலான மின் விளக்கே காரின் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், 16 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், பாடி கிளாடிங் மற்றும் குரோம் பூச்சு கொண்ட அணிகலன்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே கூறியதை போல் இக்கார் மிக சிறந்த பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட காராக இருக்கும்.

இதற்காக 64 நிறங்கள் கொண்ட ஆம்பிசியண்ட் மின் விளக்கு, 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது), 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஓடிஏ மேப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மூன்றாவது வரிசை இருக்கையாளர்களும் எளிதில் பயனடையும் வகையில் ஏசி துவாரங்கள், மிக சிறந்த மற்றும் அதிக சௌகரியமான வசதிகள் கொண்ட இருக்கை உள்ளிட்டவை கேரன்ஸில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இருக்கை அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதியையும் கொண்டிருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களுக்காக மிக உறுதியான ஸ்டீல் இக்காரை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கேரன்ஸ் காரில் இன்னும் பல சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், ஏர் ப்யூரிஃபையர் (வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கும் திறன் கொண்டது), ஏர் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்), ஸ்போர்ட் / ஈகோ / நார்மல் ஆகிய டிரைவிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்களும் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர கார் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின்கள் பற்றிய முழு விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்.
| கியா கேரன்ஸ் எம்பிவி எஞ்ஜின் விபரம் | |
| 1.4T-GDi Petrol Engine | |
| Power | 140 ps / 6000 rpm |
| Torque | 242 Nm / 1500-3200 rpm |
| Transmission | 7 DCT / 6 MT |
| 1.5 Petrol Engine | |
| Power | 115 ps / 6300 rpm |
| Torque | 144 Nm / 4500 rpm |
| Transmission | 6MT |
| 1.5 CRDi VGT Diesel Engine | |
| Power | 115 ps / 4000 rpm |
| Torque | 250 Nm / 1500-2700 rpm |
| Transmission | 6 AT / 6 MT |

கியா கேரன்ஸ் விலை விபரம்:
| ட்ரிம்கள் | பெட்ரோல் | டர்போ பெட்ரோல் | டீசல் |
| Smartstream 1.5 | Smartstream 1.4T | 1.5L CRDi VGT | |
| Premium | ₹8.99 Lakh | ₹10.99 Lakh | ₹10.99 Lakh |
| Prestige | ₹9.99 Lakh | ₹11.99 Lakh | ₹11.99 Lakh |
| Prestige Plus | 6MT - ₹13.49 Lakh
7DCT - ₹14.59 Lakh | ₹13.49 Lakh | |
| Luxury | ₹14.99 Lakh | ₹14.99 Lakh | |
| Luxury Plus (6/7 Seater) | 6MT - ₹16.19 Lakh
7DCT - ₹16.99 Lakh | 6MT - ₹16.19 Lakh
6AT - ₹16.99 Lakh |


Click it and Unblock the Notifications








