கியாவின் 4வது தயாரிப்பு... பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேரன்ஸ் காரை வாங்கலாமா? ரிவியூ வீடியோ!
கியா கேரன்ஸ் கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக கியா கேரன்ஸ் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள வீடியோவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்திய சந்தையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களின் வெற்றியை தொடர்ந்து கியா நிறுவனம் களமிறக்கவுள்ள 4வது கார் கேரன்ஸ். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டது.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் கியா கேரன்ஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கியா கேரன்ஸ் கார் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து கேரன்ஸ் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் கியா நிறுவனம் உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








