புதிய கியா கேரன்ஸ் எம்பிவி vs ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி!! விற்பனையில் மோதிக்கொள்ளும் இரு தென்கொரிய கார்கள்!
கியா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அதன் புதிய எம்பிவி காராக கேரன்ஸை நடப்பு 2022 பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

விற்பனையில் இந்த கியா எம்பிவி காருக்கு ஹூண்டாய் அல்கஸார் முக்கியமான போட்டிகளுள் ஒன்றாக விளங்கவுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் நீளமான வெர்சனாக பார்க்கப்படும் அல்கஸாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.30 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த இரு தென்கொரிய கார்களுக்கு இடையேயான வித்தியாசங்களை பிரிவு வாரியாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பரிமாண அளவுகள்
தோற்றத்தில் நேரெதிராக மோதிக்கொண்டாலும், கியா கேரன்ஸ் ஆனது எம்பிவி ரக காராகும். அதேநேரம் ஹூண்டாய் அல்கஸார் ஆனது எஸ்யூவி ஆகும். தொலைவில் இருந்து பார்த்தால், இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் துல்லியமான அளவுகளாக பார்க்கும்போது, நீளம், உயரம், அகலம் மற்றும் வீல்பேஸ் என இவை அனைத்திலும் விரைவில் விற்பனைக்குவர உள்ள கியா கேரன்ஸ் பெரியது என்பதை அறிய முடிகிறது.
| Dimensions | Kia Carens | Hyundai Alcazar |
| Length | 4,540 mm | 4,500 mm |
| Width | 1,800 mm | 1,790 mm |
| Height | 1,708 mm | 1,675 mm |
| Wheelbase | 2,780 mm | 2,760 mm |

என்ஜின் தேர்வுகள்
புதிய கியா கேரன்ஸ் எம்பிவி காரில் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி உள்ளிட்டவை என்ஜினை பொறுத்து டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்பட உள்ளன.
| Kia Carens Engine Details | |
| 1.4T-GDi Petrol Engine | |
| Power | 140 ps / 6000 rpm |
| Torque | 242 Nm / 1500-3200 rpm |
| Transmission | 7 DCT / 6 MT |
| 1.5 Petrol Engine | |
| Power | 115 ps / 6300 rpm |
| Torque | 144 Nm / 4500 rpm |
| Transmission | 6MT |
| 1.5 CRDi VGT Diesel Engine | |
| Power | 115 ps / 4000 rpm |
| Torque | 250 Nm / 1500-2700 rpm |
| Transmission | 6 AT / 6 MT |

| Hyundai Alcazar Engine Details | |
| 2.0-litre petrol engine | |
| Power | 159 ps / 6500 rpm |
| Torque | 191 Nm / 4500 rpm |
| Transmission | 6 AT / 6 MT |
| 1.5-litre diesel engine | |
| Power | 115 ps / 4000 rpm |
| Torque | 250 Nm / 1500-2750 rpm |
| Transmission | 6 AT / 6 MT |
அதுவே, ஹூண்டாய் அல்கஸாரில் 2.0 லிட்டர் பெட்ரோல் (159 பிஎஸ்/ 191 என்எம்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (115 பிஎஸ்/ 250 என்எம்) என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்
பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் ப்ளஸ் மற்றும் லக்சரி ப்ளஸ் என்கிற 5 விதமான வேரியண்ட்களில் கேரன்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் டாப் வேரியண்ட்களில் சிறப்பம்சங்களாக 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கான வயர் இல்லா இணைப்பு வசதி, 64-வண்ண விளக்குகள், காற்று சுத்திகரிப்பான், டிஜிட்டல் ஓட்டுனர் திரை மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படப்பட உள்ளன.

இவற்றில் பெரும்பான்மையானவற்றை அல்கஸார் எஸ்யூவி மாடலில் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. இருப்பினும் இதில், பெரிய சன்ரூஃப், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் வசதி மற்றும் வயர் இல்லா சார்ஜர் & மைய ஆர்ம்ரெஸ்ட் உடன் இரண்டாவது இருக்கை வரிசை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. ஆதலால் சவுகரியத்தில் கேரன்ஸ் & அல்கஸார் இரண்டும் ஒன்றையொன்று விட்டு கொடுக்காமல் உள்ளன.

ஆனால் பயணிகள் பாதுகாப்பில் மாடர்ன் கார் என்பதால் கியாவின் எம்பிவி மாடல் முதன்மை பெறுகிறது. இந்த வகையில் கேரன்ஸில் 6 காற்றுப்பைகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், ரிவர்ஸில் வருவதற்கான பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ப்ரேக் கண்ட்ரோல் முதலியவை வழங்கப்பட உள்ளன. அத்துடன் கேபினிற்கு பல்வேறு நிறத்தேர்வுகளையும் கியா கேரன்ஸ் பெற்று வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








