விற்பனை அமோகம்... கியா கேரன்ஸ் காருக்கு குவியும் புக்கிங்... எங்கேயோ சென்ற காத்திருப்பு காலம்!
கியா கேரன்ஸ் (Kia Carens) காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கியா (Kia) நிறுவனம் மிக சமீபத்தில் கேரன்ஸ் (Carens) எனும் புதுமுக கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 8 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என்கிற மிக சவாலான விலையில் இக்காரை நாட்டில் களமிறக்கியது, கியா. இது ஓர் எம்பிவி ரக வாகனமாகும். ஏற்கனவே கார்னிவல் எனும் ஆடம்பர வசதிகள் கொண்ட எம்பிவி காரை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் நிலையில், நாட்டிற்கான இரண்டாவது எம்பிவி ரக காராக இதனைக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த வாகனம் ஓர் எம்பிவி ரக காராக இருந்தாலும் எஸ்யூவி கார்கள் சிலவற்றிற்கும் போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது. ஆகையால், பிரபல நிறுவனங்களின் எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களுக்கு இதன் வருகை தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

பலர் இக்காரை வாங்க குவிந்த வண்ணம் இருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சுமார் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இக்காரை புக் செய்திருக்கின்றனர். இதன் வாயிலாகவே இந்தியர்கள் இந்த காரின் பக்கம் குவிந்து வருவது தெரிய வந்திருக்கின்றது. அதிலும், கேரன்ஸ் காரின் டீசல் வேரியண்டிற்கே நாட்டு மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இதன் வாயிலாக இந்தியர்கள் மத்தியில் தற்போதும் டீசல் வாகனங்கள் மீது மோகம் அதிகரித்துக் காணப்படுவது தெரிகின்றது. இத்தகைய மிக சிறப்பான புக்கிங் காரணத்தினால் கியா கேரன்ஸ் காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்திருக்கின்றது. அதாவது, தற்போது கியா கேரன்ஸ் காரை புக் செய்தால், அந்த வாகனத்தை கைகளில் பெற குறைந்தது 14 வாரங்களாவது காத்திருக்க வேண்டும் என்ற நிலை அதீத வரவேற்பு கிடைத்து வருவதனால் உருவாகியுள்ளது.

காத்திருப்பு காலம் வேரியண்ட் வாரியாக மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. ஆம், சில வேரியண்டுகளை பெற 49 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டுமாம். இது குறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது. அது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தைக் கீழே காணலாம்.

கியா கேரன்ஸ் பன்முக ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம் (Premium), ப்ரெஸ்டீஜ் (Prestige), ப்ரெஸ்டீஜ் ப்ளஸ் (Prestige Plus), லக்சூரி (Luxury) மற்றும் லக்சூரி ப்ளஸ் (Luxury Plus) ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், ஆறு அல்லது 7 இருக்கைகள் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகின்றன.

புதிய கியா கேரன்ஸ் கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே கேரன்ஸ் கிடைக்கின்றது. எஞ்ஜின்களின் திறன் பற்றிய விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்.

| எஞ்ஜின் மற்றும் அதன் திறன் விபரங்கள் | |
| 1.4T-GDi Petrol Engine | |
| Power | 140 ps / 6000 rpm |
| Torque | 242 Nm / 1500-3200 rpm |
| Transmission | 7 DCT / 6 MT |
| 1.5 Petrol Engine | |
| Power | 115 ps / 6300 rpm |
| Torque | 144 Nm / 4500 rpm |
| Transmission | 6MT |
| 1.5 CRDi VGT Diesel Engine | |
| Power | 115 ps / 4000 rpm |
| Torque | 250 Nm / 1500-2700 rpm |
| Transmission | 6 AT / 6 MT |

நிற தேர்வு விஷயத்திலும் கியா கேரன்ஸ் பரந்தளவு தேர்வுகளை வழங்குகின்றது. அந்தவகையில், அரோரா பிளாக் பியர்ல் (Aurora Black Pearl), கிராவிட்டி கிரே (Gravity Grey), கிளாசியர் ஒயிட் பியர்ல் (Glacier White Pearl), இம்பீரியல் ப்ளூ (Imperial Blue), மோஸ் பிரவுன் மற்றும் இன்டென்ஸ் சிவப்பு நிறுத்துடனான ஸ்பார்க்கிளிங் சில்வர் (Moss Brown and Sparkling Silver along with Intense Red) மற்றும் கிளியர் (Clear White) ஆகிய நிற தேர்வுகளில் கேரன்ஸ் கிடைக்கும்.

கியா கேரன்ஸ் காரின் விலை விபரம் பட்டியலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
| ட்ரிம்கள் | பெட்ரோல் | டர்போ பெட்ரோல் | டீசல் |
| Smartstream 1.5 | Smartstream 1.4T | 1.5L CRDi VGT | |
| Premium | ₹8.99 Lakh | ₹10.99 Lakh | ₹10.99 Lakh |
| Prestige | ₹9.99 Lakh | ₹11.99 Lakh | ₹11.99 Lakh |
| Prestige Plus | 6MT - ₹13.49 Lakh
7DCT - ₹14.59 Lakh | ₹13.49 Lakh | |
| Luxury | ₹14.99 Lakh | ₹14.99 Lakh | |
| Luxury Plus (6/7 Seater) | 6MT - ₹16.19 Lakh
7DCT - ₹16.99 Lakh | 6MT - ₹16.19 Lakh
6AT - ₹16.99 Lakh |

கியா கேரன்ஸ் காரில் மதிப்புக் கூட்டப்பட்ட அம்சங்கள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன. வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கும் ஏர் ப்யூரிஃபையர், மூன்றாவது வரிசைக்கான ஏசி வெண்டுகள், 64 நிறங்கள் கொண்ட ஆம்பிசியண்ட் மின் விளக்கு, 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது), 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஓடிஏ மேப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாரளமாக வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








