"இனி இந்த டீசல் வேரியண்டை விற்பனைக்கு வழங்க மாட்டோம்"... காரணமே சொல்லாமல் விற்பனையில் இருந்து அகற்றிய கியா!
கியா (Kia) நிறுவனம் அதன் இரு புகழ்பெற்ற கார் மாடல்களில் விற்பனைக்குக் கிடைத்து வந்த டீசல் வேரியண்டை வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீர் வெளியேற்றத்திற்கான காரணத்தை நிறுவனம் வெளியிடாதது டீசல் கார் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா நிறுவனம் சில கார் மாடல்களில் உள்ள குறிப்பிட்ட தேர்வுகளை விற்பனையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் சில வேரியண்டுகளை அது தற்போது வெளியேற்றுவதற்கு தேர்ந்தெடுத்துள்ளது.

நிறுவனத்தின் புகழ் பெற்ற கார் மாடல்களாக செல்டோஸ் (இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும்) மற்றும் கார்னிவல் (இது எம்பிவி ரக வாகனம்) ஆகியவை விளங்குகின்றன. இவற்றில் விற்பனைக்கும் கிடைக்கும் குறிப்பிட்ட டீசல் எஞ்ஜின் தேர்வையே நிறுவனம் விற்பனையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டிருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த முடிவு டீசல் வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்டோஸ் எஸ்யூவி காரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மிட்-ரேஞ்ஜ் மாடலான எச்டிகே-ப்ளஸ் டீசல் வேரியண்டையும், கார்னிவல் எம்பிவி காரின் பேஸ் டீசல் வேரியண்டையுமே நிறுவனம் வெளியேற்ற இருக்கின்றது.

இரு டீசல் எஞ்ஜின் தேர்வுகளின் வெளியேற்றத்திற்கான காரணத்தை நிறுவனம் வெளியிடவில்லை. பெரும்பாலும் நிறுவனங்கள் வரவேற்புக் கிடைக்காத வாகனங்களையே விற்பனையில் இருந்து அகற்றும். அந்தவகையில், இவ்விரு டீசல் வேரியண்டுகளின் அகற்றத்திற்கும் குறைச்சலான வரவேற்பே காரணமாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

இரு டீசல் வேரியண்டுகளும் தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதனால், அந்த தேர்வுகளுக்கான புக்கிங்குகளை ஏற்க நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கின்றது. கியா செல்டோஸ் எச்டிகே-ப்ளஸ் டீசல் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியைக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 14.25 லட்சம் ஆகும்.

கியா கார்னிவல் பேஸ் வேரியண்ட் டீசல் எஞ்ஜினின் விலை ரூ. 25.49 லட்சம் ஆகும். இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றையே நிறுவனம் விற்பனையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அதேவேலையில், பிற டீசல் வேரியண்டுகள் வழக்கம் போல் விற்பனைக்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செல்டோஸ் மாடலில் டீசல் எஞ்ஜினை ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஜிடிஎக்ஸ்-ப்ளஸ் தேர்வை வழங்குகின்றது. இதன் விலை 17.95 லட்சம் ரூபாய் ஆகும். தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்ட மாடலைக் காட்டிலும் இது ரூ. 3.7 லட்சம் அதிக விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல் கார்னிவல் கார் மாடலிலும் மாற்று எஞ்ஜின் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கின்றது. ப்ரெஸ்டீஜ் 7 சீட்டர் யூனிட்டே விற்பனையில் விலக்கப்பட்டிருக்கும் பேஸ் வேரியண்டின் மாற்றாக உள்ளது. இதன் விலை ரூ. 29.99 லட்சம் ஆகும். இது தற்போது விற்பனையில் அகற்றப்பட்டிருக்கும் பேஸ் மாடலைக் காட்டிலும் ரூ. 4.5 லட்சம் அதிகம் விலைக் கொண்டது.

எச்டிகே-ப்ளஸ் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் எஞ்ஜின், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டருடன் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த எஞ்ஜின் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த வேரியண்டில் கூடுதல் அம்சமாக 16 இன்ச் அலாய் வீல்கள், 8 இன்ச் அளவுள்ள தொடுதிரை டிஸ்டம் மற்றும் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இத்தகைய சூப்பரான தேர்வையை நிறுவனம் வெளியேற்றும் பிளானில் இருக்கின்றது.

கார்னிவல் எம்பிவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் கொண்டே வெளியேற்றப்படும் இடத்தில் இருக்கின்றது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாகக 200 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது ஓர் சொகுசு எம்பிவி ரக வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








