12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

கியா நிறுவனம் அதன் இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

எலெக்ட்ரிக் கார் பிரியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த இவி6 மின்சார காருக்கான முன் பதிவுகளை ஏற்கும் பணிகளை கியா நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது. இக்காரை மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நூறு யூனிட்டுகளை மட்டுமே அது விற்பனைச் செய்ய இருக்கின்றது.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

இதற்கான புக்கிங் பணிகளையே கடந்த மே 26ம் தேதி அன்று நாட்டில் தொடங்கியது. இந்த நிலையில், இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியாவின் குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திருக்கின்றது.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

நாட்டின் 12 முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. "விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதே 100 யூனிட்டுகள்தான், அதையும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும்தான் அது விற்பனைக்கு வழங்க இருக்குதா" என பலரை இந்த தகவல் கேள்வி எழுப்ப செய்திருக்கின்றது.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்கும்?, இதோ விபரம்:

மேற்கு இந்தியா:

மும்பை - ஆட்டோபான் கியா

புனே - கிரிஸ்டல் ஆட்டோ

அஹமதாபாத் - சூப்பர் நோவா கியா மற்றும் வெஸ்ட் கோஸ்ட் கியா

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

வடக்கு இந்தியா

டெல்லி - ஜெயந்தி கியா

குருகிராம் - திங்ரா மோட்டார்ஸ்

நொய்டா - அல்லைட் மோட்டார்ஸ்

ஜெய்பூர் - ராஜேஷ் மோட்டார்ஸ்

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

தெற்கு இந்தியா

சென்னை - கேபிடல் கியா

பெங்களூரு - எபிடோம் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் விஎஸ்டி சென்ட்ரல்

கொச்சி - இன்சியான் கியா

ஹைதராபாத் - ஆட்டோமோட்டிவ் கியா மற்றும் கார் கியா

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

கிழக்கு இந்தியா

கொல்கத்தா - ஈஸ்டர்ன் கியா

மேலே பார்த்த நகரங்கள் மற்றும் விற்பனையாளர்களிடத்தில் மட்டுமே பிரத்யேகமாக கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. தற்போது ரூ. 3 லட்சம் என்கிற கட்டணத்தில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றது.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக வரும் ஜூன் 2 ஆம் தேதி நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அன்றைய தினமே காரின் விலை பற்றிய விபரமும் அறிவிக்கப்பட இருக்கின்றது. கியா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அசெம்பிள் செய்வதற்கான எந்தவொரு திட்டத்தையும் தற்போதைக்கு கொண்டிருக்கவில்லை.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

அதனை சிபியூ வாயிலாகவே விற்பனைக்கு வழங்க இருக்கிறது. எனவேதான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இக்கார் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அதேநேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு கிடைக்கும் வருமானத்தை பொருத்து நிறுவனம் இவி6 மாடலை இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்வதற்கான திட்டத்தை வகுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

கியா நிறுவனம் இக்காரை எலக்ட்ரிக்-க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் வைத்தே வடிவமைத்திருக்கின்றது. 77.4 kWh பேட்டரி பேக்கை இவி6 இல் அது பயன்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 528 கிமீ வரையில் பயணிக்க முடியும். இந்த காரை இரு விதமான வேரியண்டுகளில் கியா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

ஜிடி மற்றும் ஜிடி லைன் இவையே இந்த தேர்வுகள் ஆகும். ஜிடி என்பது பின் சக்கர இயக்கம் கொண்ட தேர்வாகும். ஜிடி லைன் அனைத்து வீல்களும் இயங்கும் திறனுடன் கிடைக்கும். இதேபோல், 229 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை ஜிடி, 347 பிஎச்பி மற்றும் 605 என்எம் டார்க்கை ஜிடி லைனும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளன.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 192 கிமீ ஆகும். அதேநேரத்தில், வெறும் 3.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இவி6 எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கின்றது. அதிக திறன்களுடன் சேர்த்து அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

அந்தவகையில், 14 மெரிடியன் ஆடியோ ஸ்பீக்கர்கள், கார் பாடி நிறத்திலான ஃப்ளஷ் ரக தானியங்கி கதவு கைப்பிடிகள், உயர் ரக ஹெட்ஸ்-அப் திரை, மல்டி லிங்க் சஸ்பென்ஷன், 8 ஏர் பேக்குகள், அடாஸ் தொழில்நுட்பம் போன்ற பன்முக சிறப்பம்சங்கள் இவி6 காரில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், எலெக்ட்ரிக் சன் ரூஃப், 64 நிற ஆம்பியன்ட் லைட், இரட்டை 12 அங்குல திரை, 60க்கும் மேற்பட்ட கார் இணைப்பு அம்சங்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!

இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரையே நாட்டின் குறிப்பிட்ட நகர்புறங்களில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக கியா அறிவித்துள்ளது. இந்த காருக்கு தற்போது புக்கிங் பணிகள் விருவிருப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இதன் அனைத்து வீல் டிரைவ் வேரியண்டின் டெலிவரி பணிகள் வரும் செப்டம்பர் மாதமும், பின் பக்க வீல் இயக்கம் கொண்ட தேர்வின் டெலிவரி பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia ev6 electric car will be available for sale in just 12 cities
Story first published: Saturday, May 28, 2022, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X