காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

கியா நிறுவனம் ஏற்றுமதியில் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று கியா. இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் விஷயத்திலும் முன்னணியில் உள்ளது. இந்த சூழலில் கியா இந்தியா நிறுவனம் தற்போது கார்கள் ஏற்றுமதியில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

கியா இந்தியா நிறுவனம் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை தொடங்கி சுமார் 3 ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள்ளாக 1.50 லட்சம் கார்களை கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து விட்டது.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

துல்லியமாக சொல்வதென்றால் கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து தற்போது வரை 1,50,395 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த கார்கள் உலகம் முழுவதும் 95 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் இத்தனை நாடுகளில் ஓடி கொண்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

கியா இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செல்டோஸ் மிட்சைஸ் எஸ்யூவி (Seltos Midsize SUV), சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி (Sonet Compact SUV) மற்றும் கியா கேரன்ஸ் எம்பிவி (Carens MPV) ஆகிய கார்களை கியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகளில் 1.50 லட்சம் கார்கள் ஏற்றுமதி என்ற மைல்கல்லை கியா இந்தியா நிறுவனம் தற்போது கடந்து விட்டது. சர்வதேச சந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக கியா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்தியாவில் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் கியா கார்களில் செல்டோஸ் முன்னிலை வகிக்கிறது. கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் செல்டோஸ் கார்களின் பங்களிப்பு மட்டும் 72 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்த இடங்களில் கியா சொனெட் மற்றும் கியா கேரன்ஸ் கார்கள் இருக்கின்றன.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதில், கியா கேரன்ஸ் கார் கார் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். கியா நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா போன்ற பல்வேறு சந்தைகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

காலரை தூக்கி விடுங்க... இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கியா... விஷயம் என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு 8,174 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வரும் காலங்களில் கியா நிறுவனம் ஏற்றுமதியில் இன்னும் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2022, 23:57 [IST]
English summary
Kia india achieves new export milestone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+