ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா கேரன்ஸ் கார் ஹீரோவாக மாறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

இந்திய சந்தையில் கியா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 22,622 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 19,100 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 18.4 சதவீத வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

வருடாந்திர ஒப்பீட்டை, மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் கியா நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை வெறும் 18,121 மட்டுமே. ஆனால் அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையானது, 22,622 ஆக உயர்ந்துள்ளது.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

இந்த வகையில் பார்த்தால், இது 25 சதவீத வளர்ச்சியாகும். இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் கியா நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் கியா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 7 சதவீதமாக இருந்தது.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கியா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 6 சதவீதம் மட்டுமே. இதன் மூலம் கியா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 1 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை செல்டோஸ் கார் பெற்றுள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவை இதன் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன. நடப்பாண்டு மார்ச் மாதம் 8,415 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 10,557 ஆக இருந்தது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும்.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

இந்த பட்டியலில் கியா சொனெட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 8,498 ஆக இருந்த கியா சொனெட் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் 6,871 ஆக சரிந்துள்ளது. இது 19 சதவீத வீழ்ச்சியாகும். கியா நிறுவனத்தின் மிக முக்கியமான இரண்டு தயாரிப்புகளுமே விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

அப்படி இருக்கும்போது, கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக எப்படி மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்தது? என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். இந்த இடத்தில்தான் கேரன்ஸ் ஹீரோவாக மாறியுள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ள கியா கேரன்ஸ் கார், நடப்பாண்டு மார்ச் மாதம் 7,008 என்ற மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

கியா கேரன்ஸ் கார் நடப்பாண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே அதன் விற்பனை எண்ணிக்கையை கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது. கேரன்ஸ் காருக்கு கிடைத்துள்ள மிக சிறப்பான வரவேற்பு காரணமாகவே, கியா நிறுவனத்தால் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்துள்ளது.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

இதற்கிடையே இந்த பட்டியலில் நான்காவது மற்றும் கடைசி இடத்தை கார்னிவல் சொகுசு எம்பிவி கார் பிடித்துள்ளது. இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 45 ஆக இருந்த கியா கார்னிவல் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் 328 ஆக உயர்ந்துள்ளது. இது 629 சதவீத வளர்ச்சியாகும்.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ள கியா கேரன்ஸ் கார், எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ போன்ற கார்களுக்கும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான வேரியண்ட்களுக்கும் மிகச்சிறந்த மாற்றாக கியா கேரன்ஸ் பார்க்கப்படுகிறது.

ஹீரோவாக மாறிய கியா கேரன்ஸ் கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க... மாருதி சுஸுகி என்ன ஆகப்போகுதோ?

கியா கேரன்ஸ் கார் மூலம் மிக கடுமையான போட்டி உருவாகியுள்ள நிலையில், அதனை சமாளிப்பதற்காக, அப்டேட் செய்யப்பட்ட 2022 எர்டிகா காரை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து 2022 எக்ஸ்எல்6 காரை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 19, 2022, 10:57 [IST]
English summary
Kia india march 2022 model wise sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+