இந்தியால ஒரு மாசத்துக்கு மட்டும் இவ்ளோ கியா கார்கள் சேல்ஸ் ஆகுதா! ரொம்ப வேகமா வளந்துட்டு வராங்க!
இந்தியாவில் கியா நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக கியா உள்ளது. கியா செல்டோஸ் (Kia Seltos), கியா சொனெட் (Kia Sonet) , கியா கேரன்ஸ் (Kia Carens), கியா கார்னிவல் (Kia Carnival) மற்றும் கியா இவி6 (Kia EV6) என கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 5 கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், கியா இவி6 காரானது, எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபக்கம் கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி காராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே கியா செல்டோஸ், கியா சொனெட் மற்றும் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா கேரன்ஸ் ஆகிய 3 கார்கள் மட்டும்தான் கியா நிறுவனத்தின் மாஸ்-மார்க்கெட் தயாரிப்புகளாக உள்ளன. ஆனால் இந்த 3 கார்களும் தொடர்ச்சியாக விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

எனவே நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கியா நிறுவனம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 22,322 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 15,016 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் வருடாந்திர ரீதியில் கியா இந்தியா நிறுவனம் சுமார் 49 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் கூட கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் ஓரளவிற்கு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 22,022 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 22,322 ஆக உயர்ந்துள்ளது. இது 1.3 சதவீத வளர்ச்சியாகும்.

நடப்பாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில் கியா இந்தியா நிறுவனம் 300 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. கியா நிறுவனம் தற்போது சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ் லைன் மாடலை (Kia Sonet X Line) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது புதிய மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் (2022 Maruti Suzuki Brezza), ஹூண்டாய் நிறுவனம் தனது வெனியூ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் (2022 Hyundai Venue) சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தன.

கூடுதலாக ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் என் லைன் மாடலையும் (Hyundai Venue N Line) தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இப்படி அதிகரித்து கொண்டே வரும் போட்டிக்கு கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக செல்டோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கியா செல்டோஸ் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய 2 கார்களும்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. ஆனால் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களின் வடிவில் இந்த ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இவை இரண்டும் இந்த செக்மெண்ட்டிற்கு புது வரவுகள் ஆகும். வரும் நாட்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி இன்னும் கடுமையாகவுள்ளது. ஏனெனில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) என வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் இந்த செக்மெண்ட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்த போட்டியை சமாளிக்கும் வகையில் செல்டோஸ் காரை பல்வேறு விதங்களில் மேம்படுத்தி கியா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதேபோல் ஹூண்டாய் நிறுவனமும் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








