ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் தங்கள் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை விபரத்தை கியா (Kia) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கியா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 24,024 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தை குறிப்பிட வேண்டும்.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

இதுதான் கியா இந்தியா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை (Highest-ever Monthly Sales) ஆகும். இதற்கு முன்பாக கியா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதன் மூலம் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியையும் கியா இந்தியா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

கியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் வெறும் 15,015 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 24,024 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து கியா இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் மட்டுமல்லாது, நடப்பாண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டாலும் கியா நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைதான் சந்தித்துள்ளது.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் கியா நிறுவனம் 18,718 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 24,024 ஆக உயர்ந்துள்ளது. எனவே இந்த வகையில் பார்த்தால் கியா இந்தியா நிறுவனம் 28.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் இந்த வளர்ச்சியில் செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் ஆகிய கார்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை செல்டோஸ் (Kia Seltos) பெற்றுள்ளது. மொத்தம் 8,388 கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை கேரன்ஸ் (Kia Carens) பிடித்துள்ளது. மொத்தம் 7,895 கேரன்ஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது சொனெட் (Kia Sonet) ஆகும். மொத்தம் 7,455 கியா சொனெட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த பட்டியலில் கியா கார்னிவல் (Kia Carnival) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 285 கியா கார்னிவல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

இதுதவிர 1 இவி6 காரும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் கியா இந்தியா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 24,024 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் துணை தலைவரும், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவருமான ஹர்தீப் சிங் ப்ரார் கூறுகையில், ''உலகளாவிய வினியோக சங்கிலியில் தடைகள் இருந்தபோதிலும், விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

கியா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் இதனை சாத்தியப்படுத்தியது. அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். வாடிக்கையாளர்களின் வாங்குதல் மற்றும் ஓனர்ஷிப் அனுபவம் இன்னும் மேம்படுவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்வோம். எங்கள் கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம்.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

எனவே எங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு வெகு விரைவாக கார்களை டெலிவரி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்'' என்றார். ஹர்தீப் சிங் ப்ரார் கூறியபடி, செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை உள்பட வினியோக சங்கிலியில் தற்போது ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன.

ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!

இருப்பினும் இந்த தடைகளை எல்லாம் சமாளித்து, கியா நிறுவனம் விற்பனையில் புதிய சாதனை படைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் செல்டோஸ், கேரன்ஸ், சொனெட், கார்னிவல் மற்றும் இவி6 ஆகிய 5 கார்களை மட்டுமே கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வரும் காலங்களில் நிறைய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Kia india registers its highest ever monthly sales in june 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X