ஹேக்கர்களிடம் மாட்டி கொண்ட பிரபல கார் நிறுவனம்... இந்திய வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த மண்டை ஓடு

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு செல்டோஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலமாக, இந்திய சந்தையில் கியா நிறுவனம் காலடி எடுத்து வைத்தது.

தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் (Kia Seltos), கியா சொனெட் (Kia Sonet), கியா கேரன்ஸ் (Kia Carens), கியா கார்னிவல் (Kia Carnival) மற்றும் கியா இவி6 (Kia EV6) என 5 கார்களை கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த 5 கார்களுக்குமே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கியா நிறுவனம் பதிவு செய்து வருகிறது.

ஹேக்கர்களிடம் மாட்டி கொண்ட பிரபல கார் நிறுவனம்... இந்திய வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த மண்டை ஓடு

இந்த சூழலில், கியா இந்தியா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கம் தற்போது 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் (Hackers), கியா இந்தியா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'ஹேக்' செய்துள்ளனர். கியா இந்தியா நிறுவன இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ப்ரொஃபைல் பிக்சரை மாற்றியிருப்பதுடன், மெசேஜ் ஒன்றையும் ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். "Remember us? #ly #tomy Party time 💀" என மண்டை ஓடு எமோஜியுடன் மெசேஜ் பதிவிடப்பட்டுள்ளது.

இது கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்களது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கம் 'ஹேக்' செய்யப்பட்டிருப்பதை கியா இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கியா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் கியா இந்தியா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்டெடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.

தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், மறுபக்கம் சைபர் தாக்குதல்களும் (Cyberattack) அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமல்லாது, முன்னணி கார் நிறுவனங்களுக்கும் ஆன்லைன் ஹேக்கிங் சமீப காலமாக பெரும் அச்சுறுத்தலாக மாறி கொண்டுள்ளது. கியா இந்தியா நிறுவனத்திற்கு முன்னதாக, கடந்த காலங்களில் இன்னும் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் ஆன்லைன் ஹேக்கிங் பிரச்னைக்கு ஆளாகியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதற்கிடையே கியா நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை பொறுத்தவரையில், நடப்பு 2022ம் ஆண்டு 2 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை கியா கேரன்ஸ் மற்றும் கியா இவி6 ஆகியவை ஆகும். இதில், கியா கேரன்ஸ் கார் நடப்பாண்டு பிப்ரவரி மாதமும், கியா இவி6 கார் நடப்பாண்டு ஜூன் மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், கியா இவி6, எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இவி6 விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்கு போட்டியாக, வரும் ஜனவரி மாதம் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. அதே ஜனவரி மாதம் கியா நிறுவனம் செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனையில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது, கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் பல்வேறு விதங்களிலும் மேம்பட்டதாக இருக்கும். எனவே இந்த புதிய மாடலுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுக்கு, கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் மிகவும் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia india s instagram hacked check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X