2022 கியா சொனெட், செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு! புதுசா என்னென்ன அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கு?

கியா (Kia)-வின் 2022 சொனெட் (2022 Sonet) மற்றும் 2022 செல்டோஸ் (2022 Seltos) கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

கியா (Kia) மோட்டார்ஸ் அதன் 2022 செல்டோஸ் (2022 Seltos) மற்றும் 2022 சொனெட் (2022 Sonet) ஆகிய இரு கார் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிக சமீபத்தில் நிறுவனம் செல்டோஸ் கார் மாடலில் இரு புதிய டீசல் எஞ்ஜின் தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

இதில் சிறப்பு டீசல் எஞ்ஜின் தேர்வில் சிறப்பு வசதியாக ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே 2022 செல்டோஸ் மற்றும் 2022 சொனெட் கார் மாடல்களை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கணிசமான அப்டேட்டுகளுடன் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

சொனெட் ரூ. 7.15 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்தும், செல்டோஸ் ரூ. 10.19 என்ற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். தற்போது வழங்கப்பட்டிருக்கும் அப்டேட்டானது கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்ப்பு வாயிலாகவே வழங்கப்பட்டிருக்கின்றது.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

அந்தவகையில், இரு புதிய நிற தேர்வுகள் சொனெட் மற்றும் செல்டோஸ் இரண்டிலும் வழங்கப்பட்டுள்ளன. இம்பீரியல் ப்ளூ மற்றும் ஸ்பார்க்கிளிங் சில்வர் ஆகிய இரு நிற தேர்வுகளே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்துடன், சில சிறப்பு வசதிகளும் இக்கார்களில் வழங்கப்பட்டிருக்கின்றன.

அவற்றின் முழு விபரம் கீழே:

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

2022 கியா செல்டோஸின் எச்டிகே-ப்ளஸ் தேர்வில் புதிதாக ஐஎம்டி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட டீசல் மோட்டார் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

இத்துடன், எச்டிஎக்ஸ் ஏடி எனும் புதிய வேரியண்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அனைத்து தானியங்கி டிரான்ஸ்மிஷன் வேரியண்டுகளிலும் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சைடு ஏர் பேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் 2022 செல்டோஸில் கொடுக்கப்பட்டுள்ளன.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

தொடர்ந்து, வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பிரேக் அசிஸ்ட், அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஹை லைன் டையர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, சில உயர்நிலை வேரியண்டுகளில் கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

அந்தவகையில், எச்டிஎக்ஸ்-ப்ளஸ் வேரியண்டில் கர்டைன் ரக ஏர் பேக்குகளும், எக்ஸ்-லைன் வேரியண்டுகளில் எக்ஸ் லைன் லோகோவும், இன்டிகோ பெரா இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய 2022 செல்டோஸ் ஒட்டுமொத்தமாக 19 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 10.19 லட்சம் தொடங்கி ரூ. 18.15 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

2022 சொனெட்:

செல்டோஸில் வழங்கப்பட்டதைப் போல சொனெட் கார் மாடலில் எந்த மெக்கானிக்கல் மாற்றமும் வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக நிறுவனம் சில சிறப்பு வசதிகள் சேர்ப்பை மட்டும் செய்திருக்கின்றது. அந்தவகையில், புதிய சொனெட்டில் சைடு ஏர் பேக் மற்றும் ஹைலைன் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை வழக்கமான அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

இதன் உயர்நிலை வேரியண்டான எச்டிஎக்ஸ்-ப்ளஸ் வேரியண்டில் கர்டைன் ஏர் பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் 2022 சொனெட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

2022 கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு... என்ன அம்சம் புதுசா கொடுத்துருக்காங்க!

இக்கார் மாடலின் எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஇ வேரியண்டில் கூடுதல் சிறப்பு வசதியாக 4.2 இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் செமி லெதரேட் இருக்கை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. சொனெட் ஒட்டுமொத்தமாக 21 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், ரூ. 7.15 லட்சம் தொடங்கி ரூ. 13.09 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இக்கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2022, 18:38 [IST]
English summary
Kia launches 2022 seltos 2022 sonet here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+