காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு வசதிகள்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

கியா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் சொனெட் (Sonet) -ம் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடலாகும். மிகவும் முரட்டுத் தனமான தோற்றம், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்களை இந்த கார் வெகுவாகக் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

இந்த ஈர்ப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் கியா நிறுவனம் 'சொனெட் எக்ஸ்-லைன்' (Sonet X-Line) எனும் புதிய வேரியண்டை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் சிறப்பு பதிப்பாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால், சிறப்பம்சங்களும் இக்காரில் சற்று தாராளமாக இடம் பெற்றுள்ளன. எனவே சொனெட்டின் காஸ்ட்லியான வேரியண்டாக எக்ஸ்-லைன் காட்சியளிக்கின்றது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என இரு விதமான தேர்வுகளில் இந்த சொனெட் எக்ஸ்-லைன் விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான சொனெட் கார் மாடலைக் காட்டிலும் இந்த வேரியண்ட் முற்றிலும் கவர்ச்சியான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

குறிப்பாக, எக்ஸ்-லைனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் வேற லெவல் லுக்கிற்கு காரை எடுத்துச் சென்றிருக்கின்றது. சிறப்பு வண்ணப்பூச்சாக எக்ஸ்க்ளூசீவ் மேட் கிராஃபைட் மற்றும் எக்ஸ்க்ளூசீவ் க்ரிஸ்டல் கட் அலாய் வீல்கள் இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அலாய் வீல்கள் 16 அங்குலம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிறுவனம் சேர்த்திருக்கும் பெரும்பாலான அம்சங்கள் தனித்துவமானதாகவும், அதிக கவர்ச்சியானதாகவும் காட்சியளிக்கின்றது. உதாரணமாக கியா சிக்னேச்சர், புலியின் மூக்கு போன்ற அமைப்புடைய க்ரில், ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வேற லெவல் ஸ்டைலிஷானதாக கியா சொனெட் எக்ஸ்-லைன் காரை காட்சியளிக்க செய்கின்றது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

இந்த அம்சங்கள் மட்டுமில்லைங்க, இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு அலங்காரப் பொருட்கள் புதிய சொனெட் எக்ஸ்-லைன் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள் இதோ:

கியா சிக்னேச்சர் டைகர் நோஸ் கிரில் - உயர் பளபளப்பான கருப்பு நிறத்திலும், எக்ஸ்க்ளூசிவ் டைமண்ட் நர்லிங் பேட்டர்ன் - பியானோ பிளாக் நிறத்திலும், எக்ஸ்க்ளூசிவ் டார்க் குரோம் பனி மின் விளக்கும், எக்ஸ்க்ளூசிவ் பியானோ பிளாக் நிறத்திலான அவுட்சைட் மிரர் எல்இடி டர்ன் லைட்டுடன், சைடு டூர் டார்க் ஹைப்பர் மெட்டல் கார்னிஷ் மற்றும் சில்வர் நிற பிரேக் காலிப்பர்கள் சொனெட் எக்ஸ்-லைனில் வழங்கப்பட்டிருக்கின்றது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

இதுமட்டுமின்றி, ஷார்க் ஃபின் ஆண்டெனா - மேட் கிராஃபைட் நிறத்திலும், எக்ஸ்-லைன் லோகோ, டார்க் ஹைப்பர் மெட்டல் அக்செண்டுகள், எக்ஸ்க்ளூசிவ் பியானோ பிளாக் டூயல் மப்ளர், ஆரஞ்சு நிற தையல் மற்றும் எக்ஸ்-லைன் லோகோவுடன் கூடிய லெதெர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், ஆரஞ்சு தையல் & சோனெட் லோகோவுடன் கூடிய லெதர் போர்த்தப்பட்ட டி-கட் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவையும் சொனெட் எக்ஸ்லைனில் இடம் பெற்றிருக்கின்றன.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

விலை விபரம்:

1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல், 7 டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் விற்பனைக்கு வந்திருக்கும் சொனெட் எக்ஸ்-லைன் ரூ. 13,39,000 -க்கும்,

1.5 லிட்டர் டிஆர்டிஐ டீசல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் விற்பனைக்கு வந்திருக்கும் சொனெட் எக்ஸ்-லைன் ரூ. 13,99,000 க்கும் விற்பனைக் கிடைக்கும்.

இந்த இரு தேர்வுகளும், நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்புகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

சொனெட் எக்ஸ்-லைன் அறிமுகம் குறித்து கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமை விற்பனை அதிகாரி மியுங் சிக் சோன் கூறியதாவது, "நாங்கள், அற்புதமான தயாரிப்புகள் மூலம் நவீன கால வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வாழ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். சோனெட் எக்ஸ்-லைன் மூலம், நாங்கள் எங்கள் வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளோம். இதிலேயே தற்போது ஸ்டைலான மற்றும் வித்தியாசமான தோற்றமுடைய புதிய தேர்வை அறிமுகம் செய்துள்ளோம். இது அற்புதமான வெளிப்புறங்கள் மற்றும் ஆற்றல்மிக்க உட்புறங்களை கொண்டிருக்கின்றது" என்றார்.

காரோட உட்பக்கமா இல்ல கப்பலோட உட்பக்கமா... அசத்தலான வசதிகளுடன் கியா சொனெட் எக்ஸ்-லைன் இந்தியாவில் அறிமுகம்...

தொடர்ந்து பேசிய அவர், "நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 32 சதவீதம் பங்களிப்பை சொனெட் வழங்கிக் கொண்டிருக்கின்றது. தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த காருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் வகையில் சொனெட் எக்ஸ்-லைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் பண்டிகைக் காலத்தில் இளம் மற்றும் ஆர்வமுள்ள நுகர்வோரைக் கவரும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்" என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 1, 2022, 13:59 [IST]
English summary
Kia launches sonet x line variant in india at rs 13 39 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+