கியா செல்டோஸில் 2 புதிய டீசல் எஞ்ஜின் தேர்வுகள் அறிமுகம்! சூப்பரான ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வாங்கிக்கலாம்
கியா செல்டோஸ் கார் மாடலில் இரு புதிய டீசல் எஞ்ஜின் தேர்வுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா (Kia) நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றே செல்டோஸ் (Seltos). இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால், இந்த செல்டோஸ் கார் மாடலே கியா நிறுவனம் இந்தியாவில் காலூன்றி நிற்க காரணமாக இருக்கின்றது. கியா இந்திய கால் தடம் பதிப்பைத் தொடர்ந்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் கார் மாடல் இதுவே ஆகும்.

இக்காரின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக கியா நிறுவனம் இரு புதிய டீசல் தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியா செல்டோஸ் எச்டிகே-ப்ளஸ் 1.5 லிட்டர் டீசல் ஐஎம்டி (Kia Seltos HTK+ 1.5 diesel iMT) மற்றும் கியா செல்டோஸ் எச்டிஎக்ஸ் 1.5 லிட்டர் ஏடி (Kia Seltos HTX 1.5 diesel AT) ஆகிய இரு புதிய தேர்வுகளையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் இரு டீசல் தேர்வுகளின் விலை விபரம்:
கியா செல்டோஸ் எச்டிகே-ப்ளஸ் 1.5 லிட்டர் டீசல் ஐஎம்டி (Kia Seltos HTK+ 1.5 diesel iMT): ரூ. 13.99 லட்சம்
கியா செல்டோஸ் எச்டிஎக்ஸ் 1.5 லிட்டர் ஏடி (Kia Seltos HTX 1.5 diesel AT): ரூ. 16.29 லட்சம்
மேலே பார்த்த இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

நிறுவனம் 2022 வெர்ஷன் செல்டோஸை மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இரு புதிய டீசல் வேரியண்டுகளை கியா அறிமுகம் செய்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதில், ஓர் டீசல் எஞ்ஜின் தேர்வில் ஐஎம்டி தானியங்கி கியர்பாக்ஸ் வசதியை வழங்கியிருப்பது கூடுதல் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக, இந்த கியர்பாக்ஸ் தேர்வை பெட்ரோல் எஞ்ஜினில் மட்டுமே கியா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் ஐஎம்டி கியர்பாக்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார்களுக்கு க்ளட்ச் வசதிக்கான அவசியம் இருக்காது. இதுவே இந்த தானியங்கி கியர்பாக்ஸின் சிறப்பு வசதியாகும்.

ஐஎம்டி (IMT) கியர்பாக்ஸா அப்படினா என்னங்க?
இன்டெல்லிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Intelligent Manual Transmission) என்பதே இதன் முழு பெயர் ஆகும். இந்த கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வாகனங்களை முழு தானியங்கி வாகனங்கள் என்று கூறிவிட முடியாது. இது வழக்கமான கார்களைப் போல் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடனேயே இருக்கும். ஆனால், ஓர் சிறு வித்தியாசமாக க்ளட்ச் வசதி இருக்காது.

ஒவ்வொரு முறையும் கியரை மாற்றும்போது தானாகவே ஆக்சுவேட்டர்கள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் வாயிலாக க்ளட்ச் இயங்கும் வகையில் இந்த கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கியரை மாற்றும்போது தனியாக க்ளட்சை அழுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இத்தகைய சூப்பரான தேர்வையே கியா நிறுவனம் அதன் டீசல் எஞ்ஜினில் கொண்டு வந்துள்ளது. இத்துடன், சேர்த்து 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட மற்றுமொரு டீசல் எஞ்ஜின் தேர்வையும் கியா அறிமுகம் செய்துள்ளது. இதுவும் 1.5 லிட்டர் மோட்டாராகும்.

இதுமட்டுமின்றி கியா செல்டோஸ் காரை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலும் விற்பனைக்கு வாங்க முடியும். தொடர்ந்து, மேலே பார்த்த கியர்பாக்ஸ் தேர்வுகள் மட்டுமின்றி ஐவிடி மற்றும் டிசிடி தேர்வுகளும் இக்கார் மாடலில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார்கள் 115 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

இதேபோல் சிறந்த திறன் வெளிப்பாடுக் கொண்ட மோட்டார்காவே 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார்கள் இருக்கின்றன. இதில், முதல் மோட்டார் 115 பிஎஸ் பவர் மற்றும் 114 என்எம் டார்க்கையும், அடுத்த மோட்டார் 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








