இது கார் இல்ல ரோட்ல போற சொர்க்கம் சார்! புதிய தலைமுறை கியா கார்னிவெல் கார் எப்ப வருது தெரியுமா?

கியா நிறுவனம் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது கியா கார்னிவெல் காரின் புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்தப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. இன்று விற்பனையில் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் எம்பிவி செக்மெண்டில் கார்னிவெல் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் எம்பிவி செக்மெண்டில் பிரிமியம் காராக இருக்கிறது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இது கார் இல்ல ரோட்ல போற சொர்க்கம் சார்! புதிய தலைமுறை கியா கார்னிவெல் கார் எப்ப வருது தெரியுமா?

இந்நிலையில் கியா நிறுவனம் கியா கார்னிவெல் காரின் 4வது தலைமுறை காரை வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதே ஆட்டோ எக்ஸ்போவில் தான் கியார நிறுவமன் தனது இவி9 கான்செப்ட் காரை காட்சிப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதே நிகழ்ச்சியில் தான் இந்த புதிய கார்னிவெல் காரும் அப்டேட் ஆகவுள்ளது.

இந்த புதிய தலைறை கார்னில் காரை பொருத்தவரை தற்போது உள்ள காரை விட அதிக பிரிமியம் கொண்ட காராக கியா நிறுவனம் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது. முன் முகப்பு பக்கத்தில் ஸ்லீக்கான கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் ஹார்ப்பாகவும் கெடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் முழு நீள எல்இடி லைட் பார் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல உட்புறமும் மார்கெட்டில் உள்ள புதிய அம்சங்களை அடக்கிய காராக இருக்கிறது.

கியா கார்னிவெல் கார் சர்வதேச மார்கெட்டில் 7, 8, மற்றும் 9 சீட்டர் ஆகிய வெர்ஷன்களில் இருக்கிறது. காரின் உள்ளே 12.3 இன்ச் 2 டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று டச் ஸ்கிரீன் உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாகவும் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக புதிய கார்னிவெல் காரில் பல ஹை-என்ட் அம்சங்கள் இருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் கார்னிவெல் கார் 2.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் மற்றும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் ஆகிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இதில் டீசல் இன்ஜின் 200 பிஎஸ் பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் புதிய அப்டேட் காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் புதிய காரில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை கார்னிவெல் கார் தற்போது உள்ள காரை விடப் பெரிய காராக வெளியாகவுள்ளது.இதனால் தற்போது உள்ள காரை விட அதிகமான இடவசதி இந்த காரில் இருக்கும். இந்த கார் மார்கெட்டிற்கு வரும் போது ரூ30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இன்னோவா ஹைகிராஸ் காரின் டாப் என்ட் மாடல் விலையும் கிட்டத்தட்ட இது தான். இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, December 30, 2022, 12:55 [IST]
English summary
Kia plans to launch new gen carnival in auto expo 2023
மேலும்... #kia #கியா #auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+