வந்து கொஞ்ச நாளில் இப்படி ஒரு சாதனையா? கியா நிறுவனத்தைப் பார்த்து பொறாமைப்படும் போட்டி நிறுவனங்கள்
கியா நிறுவனத்தின் கடந்த ஜூலை மாத விற்பனை ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களையும், எவ்வளவு வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது என்பதையும் காணலாம் வாருங்கள்.

ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவிற்குள் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த நிறுவனம் என்றால் கியா தான். தற்போது கியா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் கியா நிறுவனத்தின் விற்பனை குறித்த ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கியா நிறுவனம் மொத்தம் 22,022 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 ஜூலை மாத விற்பனையான 15,016 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 46.66 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது ஜூன் மாதம் மொத்தம் 24 ஆயிரம் கார்கள் விற்பனையாகியிருந்தது. விற்பனை 8.33 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

கியா நிறுவனத்தைப் பொருத்தவரை அதிகமாக விற்பனையாவது செல்டோஸ் கார் தான். கடந்த ஜூலை மாதம் மொத்தம் 8451 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 6983 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 21.02 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது ஒட்டு மொத்த விற்பனையில் 38.38 சதவீதம் பங்காக இருக்கிறது.

அடுத்த இடத்தில் கியா சோனட் கார் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்த கார் 7215 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 7615 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு விற்பனையில் 5.99 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. 3வது இடத்தில் கியா கேரன்ஸ் கார் இருக்கிறது. இது கடந்த ஜூலை மாதம் மொத்தம் 5978 கார்கள் விற்பனையாகியுள்ளது.

பட்டியலில் 4வது இடத்தில் கியா கார்னிவல் கார் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 288 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 358 கார்கள் விற்பனையாகியிருந்தது. விற்பனையில் 19.55 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இவி 6 காரை பொருத்தவரை மொத்தம் 90 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு ஜூலை மாதம் வெறும் 1 கார் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

இந்த 2022ம் ஆண்டை பொருத்தவரை கியா நிறுவனம் இதுவரை மொத்தம் 1,43,845 கார்கள் விற்பனையாகியுள்ளது. செல்டோஸ் மற்றும் சோனட் காரை பொருத்தவரை மார்கெட்டில் நல்ல விற்பனையைப் பெற்று வருகிறது. இதன் செக்மெட்டில் இந்த கார்கள் கடந்த 7 மாதங்களின் விற்பனையில் முறையே 40 மற்றும் 33 சதவீத பங்கை வகித்து வருகிறது. கியா கேரன்ஸ் காரை பொருத்தவரை 25 சதவீத விற்பனையைப் பெற்றுள்ளது.

கியா நிறுவனம் சமீபத்தில் 5 லட்சம் கார்களை மார்கெட்டில் விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது. கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 5,11,219 கார்கள் மொத்தம் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து சிறப்பான விற்பனையைப் பெற இந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் செல்டோஸ் காரில் அந்நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது. கியா செல்டோஸ் காரில் 6 ஏர்பேக், இஎஸ்சி, ஆல்வீல் டிஸ்க் பிரேக், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டெபிலிட்டி, டிஎம்பிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளது.


Click it and Unblock the Notifications








