எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்!

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான கியா செல்டோஸ் (Kia Seltos) காரை இளைஞர் ஒருவர் வெறுக்க ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

கியா (Kia) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் செல்டோஸ் (Seltos)-ம் ஒன்று. இந்த காரே நிறுவனத்தின் சூப்பர் ஸ்டார் கார் மாடலாகவும் இருக்கின்றது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை கொண்டிருக்கும் அளவிற்கு அது விற்பனையில் தற்போது சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

இத்தகைய புகழ்மிக்க காராகவே செல்டோஸ் இருக்கின்றது. இந்தமாதிரியான ஓர் கார் மாடலையே தான் வெறுப்பதாக அக்காரின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். எக்கசக்க பிரச்னைகளைச் சந்தித்தன் விரக்தியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பார்க்கலாம், வாங்க.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

ஜெய்பூரை சேர்ந்த ஓர் இளைஞர் கியா செல்டோஸ் காரின் எச்டிஎக்ஸ் பிளஸ் வேரியண்டை கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வாங்கியிருக்கின்றார். இந்த ஒன்பது மாத கால பயன்பாட்டிலேயே எக்கசக்க பிரச்னைகளை செல்டோஸ் அவருக்கு வழங்கத் தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, சமீபத்தில் காரின் ஏர் கன்டிஷன் சிஸ்டம் திடீரென வேலை செய்யாமல் போயிருக்கின்றது.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

ஏற்கனவே இதுபோன்று ஓர் முறை ஆகிய நிலையில், சம்பவ தினத்தன்று மீண்டும் ஏசி வேலை செய்யாமல் போயிருக்கின்றது. இதனால் விரக்தியடைந்த காரின் உரிமையாளர், சர்வீஸ் மையத்தின் உதவியை நாடினார். அங்கு காரை பரிசோதித்த சர்வீஸ் சென்டர் மெக்கானிக்குகள், "நல்ல வேலையாக முன்கூட்டியே வந்துட்டீங்க. கொஞ்சம் தாமதம் செஞ்சிருந்தாகூட கார் தீ விபத்துல சிக்கியிருக்கும்னு" அதிர்ச்சியை கிளப்பிவிட்டிருக்காங்க.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

இதைத்தொடர்ந்து, ஒரு சில பாகங்களை அகற்றி, அதற்கு பதிலாக புதிய பாகங்களை ஷோரூம் மாற்றியிருக்கின்றது. செலவானாலும் பரவாயில்லை எப்படியோ தப்பிச்சோமே என நினைத்து, இளைஞர் காரை பழுதுபார்த்துவிட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். அப்போதுதான் யாருமே எதிர்பாராத சம்பவம் அங்கு அரங்கேறியிருக்கின்றது.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளி வர ஆரம்பித்திருக்கின்றது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட காரின் உரிமையாளர் தீயணைக்கும் முயற்சியில் களமிறங்கினார். ஆனால், தீயை அணைப்பதற்குள்ளாக எஞ்ஜின் பகுதியில் இருந்த ஒயர், ஃப்யூஸ் பாக்ஸ், ஃப்யூவல் குழாய் லைன் மற்றும் பல பாகங்கள் நெருப்பில் கருகி நாசமாகின.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

இதனால், ரூ. 6 லட்சம் வரை செலவாகியிருக்கின்றது. ஆனால், இந்த ஒட்டுமொத்த தொகையையும் இன்சூரன்ஸ் வாயிலாக கியா கார் விற்பனையாளர் சரி செய்து கொடுத்திருக்கின்றார். எனவே காரின் உரிமையாளர் பெரியளவில் செலவு ஏற்படவில்லை என தெரிகின்றது.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

அதேநேரத்தில், கார் தீ விபத்தில் சிக்கியதன் காரணத்தினால், அதன் எஞ்ஜின் பகுதியில் புதிதாக சத்தம் வர ஆரம்பித்திருப்பதாக அக்காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சர்வீஸ் மையத்திடம் மீண்டும் புகாரளிக்கப்பட்டிருக்கின்றது. புகாரை அடுத்து காரை சோதித்து பார்த்த சர்வீஸ் குழு, அக்காரின் ஃப்யூவல் இன்ஜெக்டர் தீ விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

ஆகையால், அதை சரி செய்யும் பணியில் சர்வீஸ் பணியாளர்கள் களமிறங்கியிருக்கின்றனர். இந்த தொடர் நிகழ்வுகளே கியா செல்டோஸ் காரை வெறுக்கும் நிலைக்கு அதன் உரிமையாளரை தள்ளியிருக்கின்றது. காரை வாங்கிய 9 மாதங்களில் 3 மாதங்கள் சர்வீஸ் சென்டரிலேயே கார் இருந்திருப்பதாக இளைஞர் வேதனை தெரிவித்தார்.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

தொடர்ந்து, கியா சர்வீஸ் சென்டரில் உள்ள மெக்கானிக்குகள் போதியளவில் பயிற்சி பெற்றவர்களாக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கின்றார். என்னதான் இதுபோன்று ஒருசாரார் செல்டோஸ் குறித்து புகார்களைத் தெரிவித்து வந்தாலும், இந்தியாவின் மிக சிறப்பாக விற்பனையாகும் கியா தயாரிப்பாக செல்டோஸ் இருக்கின்றது.

எல்லாரும் விரும்பும் கியா செல்டோஸ் காரை வெறுத்த உரிமையாளர்... ஜீரோ காஸ்ட்ல சர்வீஸ் செஞ்சும் பிடிக்கலையாம்... முழு தகவல்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் கியா நிறுவனம், தங்களிந் தயாரிப்புகள் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியிருப்பதாக தகவல் வெளியிட்டது. நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆகின்றன. இத்தகைய குறுகிய காலத்தில் வேறு எந்த நிறுவனம் பெற்றிராத விற்பனை வளர்ச்சியை கியா பெற்றிருக்கின்றது. ஆகையால், ஒட்டுமொத்த இந்திய வாகன உலகின் பார்வையும் கியா நிறுவனத்தின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

Article Published On: Wednesday, July 20, 2022, 17:07 [IST]
English summary
Kia seltos catches fire while driving here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+