விபத்துக்குள்ளான காரை முற்றிலும் இலவசமாக சரி செய்து கொடுத்த கியா டீலர்! நிம்மதி பெருமூச்சு விட்ட கார் ஓனர்!

விபத்தினால் முழுமையாக சேதம் அடைந்த காரை அதன் உரிமையாளரிடம் ஒரு பைசாகூட வாங்காமல் டீலர் ஷோரூமே ரெடி செய்து கொடுத்து உள்ளது. இந்த சுவாரஷ்யமான சம்பவம்குறித்த முக்கிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அண்மையில் சர்வீஸுக்கு விடப்பட்ட புத்தம் புதிய கியா சொனெட் கார், மோசமான கையாளல் காரணமாக விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களைச் சந்தித்தது. சர்வீஸ் மையத்திலேயே இந்த நிகழ்வு அரங்கேறியது. ஆனால், சர்வீஸ் நிர்வாகமோ அவர்களால் சேதம் ஏற்பட்டிருப்பதை மறைத்து, இழப்புகளை காப்பீட்டு நிறுவனத்தின் வாயிலாக ஈடுகட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. சர்வீஸ் முடிந்த பின்னர் டெஸ்ட் ரைடு செய்தபோது மாடு ஒன்றின்மீது மோதியதனாலேயே இந்த விபத்து அரங்கேறியதாகக் கூறி அவர்கள் இன்சூரன்ஸை கிளைம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கின்றனர்.

விபத்து

சர்வீஸ் மையத்தின் இந்த காரணத்தின்மீது நம்பிக்கைக் கொள்ள சொனெட் காரின் உரிமையாளர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். மேலும், தனக்கு சிசிடிவி காட்சிகளை காட்டும்படி டீலர் நிர்வாகத்திடம் கேட்டிருக்கின்றார். ஆனால், அவர்கள் சிசிடிவி காட்சிகளை காட்டாமல் இழுத்தடிப்பு செய்து வந்திருக்கின்றனர். கடைசியில் நெடிய போராட்டத்திற்கு பின்னர் சர்வீஸ் மையத்தின் சிசிடிவி காட்சிகள் அவருக்கு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த பின்னரே கவனக் குறைவாக சர்வீஸ் மைய ஊழியர் காரை கையாண்டதால் அது விபத்துக்கு ஆளானது தெரிய வந்தது.

இதை அறிந்த பின்னர் என்னால் இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாது, நீங்களே இதற்கு பொறுப்பேற்று சரி செய்து தரும்படி காரின் உரிமையாளர் கேட்டிருக்கின்றார். ஆனால், இதற்கு ஆரம்பத்தில் கியா சர்வீஸ் மையம் ஒத்துவரவில்லை. இந்த நிலையிலேயே சமூக வலைதளத்தின் வாயிலாக தன்னுடைய பிரச்னைகளை அவர் முறையிட்டிருக்கின்றார். இந்த நிகழ்வு நெட்டிசன்கள் மத்தியில் பெரிதும் பகிரப்பட்டது. இது கியா நிறுவனத்திற்கு மேலும் அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்தது.

இந்த நிலையிலேயே கார் முழுவதுமாக சரி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்தால் கடுமையான சேதங்களைச் சந்தித்த கியா சொனெட் கார் தற்போது புதிதுபோல் மின்னும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த சர்வீஸ் மையமே முழு பொறுப்பேற்று ஒரு பைசாகூட காரின் உரிமையாளர் இடத்தில் இருந்து வாங்காமல் சரி செய்து கொடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

ஜலஜ் அகர்வால் என்பவரே காரின் உரிமையாளர் ஆவார். ராஜேஷ் கியா எனும் டீலர்ஷிப்புக்கு சொந்தமான சர்வீஸ் மையத்திலேயே தனது சொனெட் எஸ்யூவி காரை அவர் சர்வீஸ் விட்டிருக்கின்றார். கார் வாங்கி சில மாதங்களே ஆகுவதாக காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே வழக்கமான பராமரிப்பிற்காக கார் சர்வீஸ் மையத்தில் விடப்பட்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அந்த கார் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது.

விபத்து

இந்த விபத்தில் காரின் முகப்பு பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. பம்பர், ஹெட்லைட்கள், ரேடியேட்டர் மற்றும் பானெட் என காரின் முகப்பு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்திருக்கின்றது. இவை அனைத்தையும்தான் இலவசமாக சர்வீஸ் மையம் சரி செய்து கொடுத்திருக்கின்றது. செய்த தவறுக்காக அவர்களே இதை செய்திருக்கின்றனர். இதனை முன்னரே அவர்கள் தவிர்க்காமல் செய்து கொடுத்திருந்தால் கியா நிறுவனத்திற்கும், டீலருக்கும் வேற லெவலில் நற்பெயர் கிடைத்திருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கியா நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக கியா சொனெட் இருக்கின்றது. இந்த காரில் காற்றோட்டத்தை உறுதிச் செய்யக்கூடிய இருக்கைகள், போஸ் சவுண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் கார் இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கார் இணைப்பு வசதி வாயிலாக காரில் 57 விதமான கன்ட்ரோல்களை செய்ய முடியும்.

காரை ஆன் மற்றும் ஆஃப் செய்வது, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய செயல்களை செய்ய முடியும். இந்த கார் இந்தியாவில் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். கியா நிறுவனம் தற்போது இந்த காரை எக்ஸ்-லைன் எனும் சிறப்பு தேர்விலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா சொனெட் இந்தியாவில் ரூ. 7.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia sonet repaired free of cost
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X