கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் எக்ஸ் லைன் (Kia Sonet X Line) மாடலின் டீசரை கியா நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு முறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

அனேகமாக எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசரில் "Coming Soon" என்ற 'கேப்ஷன்' இடம்பெற்றுள்ளது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதை இது உணர்த்துகிறது. அத்துடன் கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள டீசரின் மூலமாக சொனெட் எக்ஸ் லைன் மாடலின் பின் பகுதி எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாகவும் கியா நிறுவனம் சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

அந்த புகைப்படத்தில் நம்மால் கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் முன் பகுதியை ஓரளவிற்குதான் பார்க்க முடிந்தது. எனினும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் ஸ்போர்ட்டியான லுக்கில் இருக்கும் என்பது இந்த டீசர்களின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மட்டுமல்லாது உட்புறத்திலும் ஸ்போர்ட்டியான டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

அத்துடன் கூடுதல் வசதிகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி, அது என்ன எக்ஸ் லைன் மாடல்? என நீங்கள் கேட்பது புரிகிறது. கியா நிறுவனத்தின் எக்ஸ் லைன் மாடல்கள், ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் (N-Line) மாடல்களுடன் ஒப்பிடக்கூடியவை. ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களில் என் லைன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

அதேபோல் கியா நிறுவனம் தனது கார்களில் எக்ஸ் லைன் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையே வரும் செப்டம்பர் 6ம் தேதி கூட தனது வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் என் லைன் மாடலை (Hyundai Venue N Line) ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் என 2 கார்களுமே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான். இந்த 2 கார்களும் இந்திய சந்தையில் ஒன்றோடு ஒன்று விற்பனையில் போட்டியிட்டு வருகின்றன. இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் என் லைன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள நிலையில், கியா நிறுவனமும் சொனெட் காரின் எக்ஸ் லைன் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

என் லைன் மற்றும் எக்ஸ் லைன் மாடல்களின் வருகைக்கு பின்னர், ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் ஆகிய 2 கார்களின் விற்பனையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வசதிகளுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், கீ லெஸ் எண்ட்ரி, இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் உள்பட பல்வேறு வசதிகளும் கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

மேலும் இபிடி உடன் ஏபிஎஸ், ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், பிரேக் அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகளும் கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், கியா சொனெட் காரில் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர் மீண்டும் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஆனால் கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலில், 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் மட்டும் ஒரே ஒரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படலாம். சொனெட் காரின் எக்ஸ் லைன் மாடலை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நாளில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் அனைத்தும் வெளியாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 28, 2022, 17:20 [IST]
English summary
Kia sonet x line teased again details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+