ஒரு பட்டனை அழுத்தினால் மீட்டிங் ரூமாக மாறும் கார்! ஜனவரி மாசம் மாஸ் காட்டப்போகும் கியா!
வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் கியா நிறுவனம் தனது இவி 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை முதன் முறையாக பொது பார்வைக்குக் கொண்டு வரப்போகிறது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆட்டோ எக்ஸ்போ நடந்த போது கியா நிறுவனம் தனது இவி9 காரின் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் முழு வெர்ஷன் கார் இந்தியாவில் வரும் 2023 ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 ஜனவரி மாதம் 13-18ம் தேதிவரை நடக்கிறது. நொய்டா பெருநகர பகுதியில் நடக்கும் இந்த நிகழ்வின்போது கியா இந்த காரை முன் முறையாக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

கியா நிறுவனம் இதற்காக ஒரு டீசரை வெளியிட்டிருந்தது. அதில் காரின் நிழலான சைடு புரோஃபைல் காட்டப்பட்டிருந்தது. அதில் முகப்பு பகுதியில் வெர்டிகலான எல்இடி எல்லாம் மற்றும் பின்பக்க எல்இடி லைட்டிங் சிஸ்டம் ஹைலேட் செய்யப்பட்டிருந்தது. இது போக காரின் முகப்பு பக்க லேசாகக் காட்டப்பட்டிருந்தது. இந்த காரின் முக்கிய அம்சம் இதன் ரேஞ்ச் தான். இந்த கார் முழு சார்ஜில் 482 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. மேலும் இந்த கார் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பத்தில் இயங்கும் கார்.
இந்த காரின் நீளம் 4930 மிமீ, அகலம் 2055 மிமீ, உயரம் 1790 மிமீ, வீல் பேஸ் 3100 மிமீ இந்த கார் இதே நிறுவனத்தின் கம்பஷன் இன்ஜின் டெல்லூரைடு எஸ்யூவி காரை விட நீளம் சற்று குறைவாகவும், அகலம் மற்றும் வீல் பேஸ் சற்று அதிகமாகவும் இருக்கிறது. இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு கியா நிறுவனத்தின் வழக்கமான வடிவமைப்பிற்கு மாற்றாக ஏராளமான கட்ஸ் மற்றும் கீரீஸ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் முக்கியமானது மஸ்குலரான முன் மற்றும் பின்பக்க வீல் ஆர்ச்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது போக இந்த காரில் டிஜிட்டல் டைகர் முக வடிவ முன்பக்க கிரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னால் எல்இடி லைட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க லைட்டிங் பேட்டன்கள் வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பானட் வென்ட் பகுதியில் சோலர் பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரை சார்ஜ் ஏற்ற முடியாத சூழ்நிலையில் கார் பயணிக்கும் போது சோலார் பேனல் மூலம் இந்த கார் தன்னை தானே சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதி கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் மாற்றியமைக்கக்கூடிய ரூஃப் ரெயில்கள் உள்ளன. மிக முக்கியமாக இந்த காரின் கேமரா மானிட்டரிங் சிஸ்டம் காரின் கண்ணாடிகளில் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் இந்த காரின் வெளிப்புறத்தோற்றம் அட்வெஞ்சர் மற்றும் மஸ்குலானிட்டி லுக்கில் இருக்கிறது. இந்த காரின் உட்புறத்தில் லாஞ்ச் மாதிரியான ஒரு ஃபீலை வழங்குகிறது. இந்த காரின் உள்ளே 27 இன்ச் ஸ்கிரின் வைடு ஸ்கிரீன் அவுட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டியரிங் வீலும் மிகப் புதுமையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஒரு சிறப்பான வசதி ஒன்று இருக்கிறது. இந்த காரில் பாஸ் மோடு என்ற ஒரு விஷயம் இருக்கிறது திடீரென காரில் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் காரை ஓரமாக நிறுத்தி பாஸ் மோடில் போட்டுவிட்டால் காரில் உள்ள முதல் வரிசை சீட் அப்படி சுற்றி பின்பக்கம் திரும்பி விடும் பின்வரிசை சீட்டும், முன்வரிசை சீட்டும் ஒருவரை ஒருவர் பார்த்தது போ மாறிவிடும். நடுவில் உள்ள சீட் ஒரு டேபிள் போலப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாறும் அதாவது ஒரே பட்டனில் காரை மீட்டிங் ரூமாக மாற்ற முடியும்.
இதற்காகவே பிரத்தியேகமாக ஃபிளாட் ஃப்ளோர் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காருக்கும் அதிகமான இட வசதியும் இந்த காரில் உள்ளது. கியா நிறுவனத்தின் இவி6 கார் போல இந்த காரிலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை ரீசைக்கிள் செய்து இந்த காரை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த காரின் பயன்படுத்தப்பட்ட லெதரைபொருத்தவரை வீகன் லெதர் பயன்படுத்தப்பட்டது. அதாவது மிருக தோலிருந்து இந்த லெதர் எடுக்கப்படவில்லை. இது குறித்த உங்கள் கருத்தைக் காணலாம் வாருங்கள்


Click it and Unblock the Notifications








