Just In
- 2 hrs ago
“தாலாட்டும் காற்றே வா...” நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- 5 hrs ago
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- 11 hrs ago
வேட்டியை மடித்து கட்டிய ஹோண்டா, ஹூண்டாய்! மாருதியை நசுக்க போறாங்க! இந்த 2க்கும் முன்னாடி அவங்க கார் நிக்காது!
- 16 hrs ago
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
Don't Miss!
- News
‛சலாமி ஸ்லைசிங்’.. எல்லையில் சீனாவிடம் 26 ரோந்து பாயிண்டுகளை இழந்த இந்தியா.. பரபர தகவல்.. ஷாக்
- Sports
"சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை" ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு
- Movies
Pathaan: அமீர்கானால் முடியாததை சாதித்த ஷாருக்கான்.. கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூலை தாண்டிய பதான்!
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Finance
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-ஐ தாண்டியது.. இனி சாமானியர்கள் வாங்குவது கடினம் தான்..!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கியா கேரன்ஸ் கார் வச்சிருக்கீங்களா... உங்க கார்ல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு உடனே செக் பண்ணுங்க...
கியா கேரன்ஸ் காரின் ஏர்பேக்கில் பிரச்சனை இருப்பதாக சுமார் 44 ஆயிரம் கார்களை அந்நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்

கியா நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்து மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்ற நிறுவனம். இந்நிறுவனம் வெளியிட்ட பல கார்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் கார்களின் டிசைன், அதில் உள்ள அம்சங்கள், சர்வீஸ் சென்டர்கள் என கியா இந்திய மக்களின் தேவையை அறிந்து அதற்கு தகுந்தார் போல் தனது பிஸ்னஸை துவங்கியதால் மக்கள் எளிதாக கியா கார்களை ஏற்றுக்கொள்ள துவங்கிவிட்டனர்.

இந்நிறுவனம் வெளியிடுவதில் முக்கியமான கார் கியா கேரன்ஸ் கார் தான். இந்த கார்களை குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் பலர் இந்த காரை தான் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் கியா கேரன்ஸ் காரில் தற்போது ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. கியா காரில் உள்ள ஏர்பேக்கை இயங்க வைக்கும் சாஃப்ட்வேர் சரியாக வேலை செய்ய வில்லையாம். இதை கியா நிறுவனமே கண்டுபிடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்நிறுவனம் 6 மற்றும் 7 சீட்டர் கியா கேன்ஸ் கார்களை அப்டேட் செய்து வெளியிட்டது. இதன் பின் தயாரிக்கப்பட்ட கார்களில் இந்த பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 44,174 கார்களில் இந்த பிரச்சனை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து கியா நிறுவனம் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த பிரச்சனையை வெறும் சாஃப்ட்வேர் அப்டேட் மூலமே சரி செய்து விட முடியும்.

இதையடுத்து கியா நிறுவனம் சமீபத்தில் கியா கேரன்ஸ் கார்களை வாங்கிய 44,174 பேருக்கும் காரை திரும்ப சர்வீஸ் சென்றடருக்கு கொண்டு வரும் படி அழைப்பு விடுத்துள்ளது. ஒரு வேலை நீங்களும் சமீபத்தில் கியா கேரன்ஸ் காரை வாங்கியிருந்தால் உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள கியா சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு செல்வது நல்லது.

அவர்கள் இலவசமாகவே இந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட சாஃப்ட்வேர் அப்டேட்டை உங்கள் காருக்கு செய்து கொடுப்பார்கள். இது முற்றிலும் இலவசமான ஒன்று தான். ஏர் பேக் என்பது நம் உயிரை காக்கும் விஷயம் இதில் நாம் அலட்சியமாக இருக்க கூடாது. அதனால் நீங்கள் உடனடியாக உங்கள் காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது தான். நல்லது. கியா கேரன்ஸ் காரை வாங்கும் முடிவில் இருந்தால் காரை வாங்கும்போது அதன் சாஃப்ட்வேரில் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு வாங்கவும்.

கியா கேரன்ஸ் காரின் இன்ஜினை பொருத்தவரை கியா செல்டோஸ் காரின் இன்ஜின் தான் இந்த காரிலும் இருக்கிறது. இதில் 1.4 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் மறஅம் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆப்ஷனாக 1.5 லிட்டர் நேச்சுரஸ் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினும் இருக்கிறது. இது 115 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டீசல் இன்ஜின் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் சிஆர்டிஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 115 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பாதுகாப்பை பொருத்தரவை கியா நிறுவனம் கேரன்ஸ் கார்களில் 6 ஏர்பேக்களை வைத்துள்ளது, இது போக ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு மவுண்டட் சீட்கள், ரியர் பார்க்கிங் சென்சார், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், இஎஸ்சி, ஏபிஎஸ், டவுண்ஹில் பிரேக் கண்ட்ரோல் ஆகிய விஷயங்களை பொருத்தியுள்ளனர். அதனால் குடும்பத்துடன் சென்றாலும் இந்த கார் பாதுகாப்பான காராக இருக்கும்.

மேலும் இந்த காரில் உள்ள டெக்னாலஜி அம்சங்களை பொருத்தவரை 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் மற்றும் ஆண்ட்ராய்டு சப்போர்ட், 8 ஸ்பீக்கர் போஸ் சரவுண்ட் சிஸ்டம், 64 கலர் ஆம்பியன்ட் லைட்டிங், சன் ரூஃப், வென்டிலேடட் சீட்கள், இரண்டாம் வரிசையில் ஒன் டச் ட்ரம்பிள் டவுண் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
-
ஏன்ய்யா... கார்கள் இறக்குமதிக்கு இவ்ளோ பணம் செலவு பண்றீங்க!! பாகிஸ்தானில் பொருளாதாரம் சரியாகாது போலயே!!
-
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!