உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

உலகின் அதி-வேக திறன் மிக்க கார் கோனிக் செக் ஜெஸ்கோ அப்சல்யூட் (Koenigsegg Jesko Absolut) வெளியூடு செய்யப்பட்டுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

உயர் செயல்திறன் மிக்க கார்களை தயாரித்து வரும் கோனிக்செக் (Koenigsegg) நிறுவனம், அதன் உற்பத்தி தயாராக இருக்கும் ஜெஸ்கோ அப்சல்யூட் (Jesko Absolut) கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. வெளியீட்டைத் தொடர்ந்து அக்கார்குறித்த அனைத்து முக்கிய விபரங்களையும் கோனிக்செக் தற்போது வெளியிட்டுள்ளது.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

அதாவது, காரில் என்ன மாதிரியான வசதிகள், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன மற்றும் காரின் செயல் திறன், எஞ்ஜின் விபரங்கள் உள்ளிட்டவை பற்றிய தகவல்களை கோனிக்செக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கோனிக்செக் நிறுவனம் இக்காரை கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவிலேயே காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே பலரின் கவனத்தை ஜெஸ்கோ அப்சல்யூட் ஈர்த்துவிட்டது.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

இந்த காரை கோனிக்செக் நிறுவனம் புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300-பிளஸ் காரை தோற்கடிக்கும் வகையில் உருவாக்கியிருக்கின்றது. இந்த காரே தற்போது உலகின் மிக அதிக வேகத்தில் செல்லக் கூடிய காராகும். இக்கார் மணிக்கு 489 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடியது.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

இதைவிட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய காராகவே கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 531 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. ஆனால் இந்த வேகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறன் மிக்க காரையே நிறுவனம் தற்போது உற்பத்திக்கு தயாராக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உற்பத்தி தயாராக இருக்கும் கோனிக்செக் ஜெலஸ்கோ அப்சல்யூட் -ஐயே தற்போது நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இக்காரை தயாரிப்பு நிறுவனம் கிராஃபைட் கிரே வண்ண பூச்சில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

இத்துடன், ஆரஞ்சு நிற கோடு காரின் நடுப்பகுதியை பிரிக்கும் வகையில் முன் பக்கம் தொடங்கி பின் பக்கம் வரை நீள்கின்றது. இதுமட்டுமின்றி காரின் ஸ்பாய்ளர் மற்றும் வீல் ஆகிய முக்கிய பாகங்களிலும் இந்த நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

கோனிக்செக் நிறுவனம் ஜெலஸ்கோ அப்சல்யூட் காரில் ட்வின் டர்போசார்ஜட் 5 லிட்டர் வி8 எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 1600 எச்பி பவரை வெளியேற்றும்.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

இந்த திறன்களே கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் காரை உலகின் அதி-வேக காராக மாற்றியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, காரின் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றமும் அதன் அதி-வேகத்திற்கு காரணமாக இருக்கின்றது. இந்த விஷயத்திற்காக பல ஆயிரக் கணக்கான நேரங்களை நிறுவனம் செலவிட்டுள்ளது.

உலகின் அதி-வேக ஹைப்பர் கார் கோனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் வெளியீடு... மணிக்கு 531 கிமீ வேகத்தில் பறக்கும்!

காரின் உச்சபட்ச வேகத்திற்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கோனிக் செக் அதிக கவனத்தில் இருந்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இந்த லேட்டஸ்ட் ஹைப்பர் காரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 27, 2022, 8:30 [IST]
English summary
Koenigsegg jesko absolut hyper car pre production model has been revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+