ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 50யூனிட்டுகளை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த டீலர்! ஸ்லேவியாவிற்கு வரவேற்பு அல்லுது!
ஒரே நேரத்தில் 50 யூனிட்டுகள் ஸ்லேவியா (Skoda Slavia) செடான் கார்களை சென்னை-பாண்டி குன் ஸ்கோடா (Kun Skoda) டீலர் டெலிவரி கொடுத்து தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கோடா (Skoda Auto India) நிறுவனம் அதன் பிரீமியம் தர செடான் ரக கார் மாடலான ஸ்லேவியா (Slavia)-வை மிக சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் 2.0 கொள்கையின்கீழ் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் இரண்டாவது தயாரிப்பாகும்.

அதேநேரத்தில், நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான ரேபிட்-ஐ ரீபிளேஸ் செய்யும் வகையிலும் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த காரையே குறிப்பிட்ட ஓர் ஸ்கோடா கார் விற்பனையாளர் அதிகபட்ச எண்ணிக்கையில் டெலிவரி கொடுத்திருக்கின்றார்.

ஒரே நாளில் ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக 50 யூனிட் ஸ்லேவியா கார்களை விற்பனையாளர் டெலிவரி கொடுத்திருக்கின்றார். இந்த நிகழ்வு குறித்து வெளியாகியிருக்கும் வீடியோவே தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கின்றது.

இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மக்கள் பலர் எஸ்யூவி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களுக்கு மிக அமோகமான டிமாண்டை வழங்கி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஸ்கோடா நிறுவனம் அதன் ரேபிட் செடான் ரக காருக்கு பதிலாக புத்தம் புதிய ஸ்லேவியா கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது.

ஆகையால், இக்காருக்கு எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற சந்தேகமே பலர் மத்தியில் இருந்தது. இந்த மாதிரியான அனைத்து விதமான சந்தேகங்களையும் உடைத்தெறியும் வகையில் ஸ்லேவியா தற்போது மிக சூப்பரான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஒரே நாளில் 50 யூனிட்டுகள் டெலிவரி கொடுக்கப்பட்ட நிகழ்வு அமைந்துள்ளது.

இந்த சம்பவம் சென்னை மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்கோடா டீலர் குன் ஸ்கோடாவினாலேயே அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், இதனை ஓர் திருவிழாவை போல் அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். இதில், கார் உரிமையாளர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதை நம்மால் காண முடிகின்றது.

ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா காரை அதன் எம்க்யூபி ஏ0 ஐஎன் (MQB A0 IN) பிளாட்பாரத்தில் வைத்தே கட்டமைக்கின்றது. இதே பிளாட்பாரத்தில் வைத்தே ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரும் இதிலேயே கட்டமைக்கப்பட உள்ளது.

ஸ்லேவியா ஓர் பிரீமியம் தர செடான் காராகும். இந்த காரில் எக்கசக்க பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி ஹெட்லேம்ப், மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், வெண்டிலேட் இருக்கைகள், ட்யூவல் டோன் லெதர் இருக்கை, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இக்கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை இரண்டும் பெட்ரோல் மோட்டார்கள் மட்டுமே ஆகும். டீசல் எஞ்ஜின் தேர்வுகளை வழங்குவதை ஸ்கோடா நிறுத்தியிருக்கின்றது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே ஸ்லேவியா விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுமட்டுமின்றி, ஆக்டீவ், ஆம்பிசன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஸ்டைல் வேரியண்டை சன்ரூஃப் உடனும், சன்ரூஃப் இல்லாமலும் பெற்றுக் கொள்ள முடியும். இது ஓர் உயர்நிலை தேர்வு என்பதால் இதுபோன்று இன்னும் பல ஆஃபர்களை இத்தேர்வில் ஸ்கோடா வழங்குகின்றது. ஸ்லேவியா ரூ. 10.69 லட்சம் தொடங்கி ரூ. 16.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








