நம்பற மாதிரியே இல்ல.. நம்ம இந்தியால இந்த காருக்கு இப்படி ஒரு வரவேற்பா! லம்போர்கினிக்கே இது ஆச்சரியமா இருக்காம்
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்தியாவில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிக மிக விலையுயர்ந்த சொகுச கார் ஒன்றிற்கு இந்தியர்களிடத்தில் வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லம்போர்கினி (Lamborghini) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் உருஸ் (Urus SUV) எஸ்யூவி காருக்கே இந்திய சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் டிமாண்ட் ஏகபோகமாக நிலவிக் கொண்டிருக்கின்றது.

இதுவரை சுமார் 200க்கும் அதிகமான இந்தியர்கள் இந்த காரை வாங்கியிருக்கின்றனர். இந்தளவிற்கு மிக மிக விலையுயர்ந்த ஓர் சொகுசு கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும். அதிலும், லம்போர்கினி நிறுவனத்தின் ஓர் தயாரிப்பு இந்தளவு மிக சூப்பரான டிமாண்டை இந்தியாவில் பெறுவது முற்றிலும் புதுமையானதாக உள்ளது.

இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. 2021 மார்ச் மாதத்திலேயே இது 100 யூனிட்டுகள் சேல் என்ற சாதனையை எட்டியிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது 200 யூனிட்டுகள் விற்பனை என்கிற புதிய சாதனை மைல் கல்லை அது எட்டியிருக்கின்றது. இத்தகைய அமோகமான வரவேற்பினால் நிறுவனத்தின் சக்சஸ்ஃபுல் மாடலாக உருஸ் மாறியிருக்கின்றது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உலகளவில் இதுவரை லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் 20 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. பன்முக நிற தேர்வில் உருஸ் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இதில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கியல்லோ ஆக் (Giallo Auge), நீரோ நோக்டிஸ் (Nero Noctis) எனும் கருப்பு நிறத் தேர்வு மற்றும் பியன்கோ மோனோசெரஸ் (Bianco Monocerus) எனும் வெள்ளை நிறம் ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

லம்போர்கினி உருஸ் அதிக சொகுசு வசதிகள் மற்றும் மிக அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எஸ்யூவி ரக காராகும். இக்காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த மோட்டாரின் உச்சபட்ச வேகம் என்ன தெரியுமா?, இது மணிக்கு 305 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதேவேலையில், வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து இக்கார்மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டிருக்கின்றது. இதுமாதிரியான பல்வேறு சூப்பர் பவர்களை இக்கார் தன்னுள் அடக்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த வாகனம் பெற்று வருகின்றது.

தற்போது இக்காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியில் லம்போர்கினி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் உருஸ் எஸ்யூவி-யை புதுப்பிக்கும் பணியில் அது களமிறங்கியிருக்கின்றது. இந்த வெர்ஷன் தற்போது விற்பனையில் இருக்கும் உருஸ் காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக லக்சூரி வசதிகளைக் கொண்டதாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் இந்திய வருகை 2023 ஆம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த உருஸ் கார் உலகின் மிகவும் கவர்ச்சியான கார் மாடல்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் அழகான காராக 2023ம் ஆண்டில் வருகை தரவிருக்கும் அப்டேட்டட் உருஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லம்போர்கினி உருஸ் இந்தியாவில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா உட்பட பல்வேறு திரைப் பிரபலங்கள் இக்காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பாலிவுட் திரையுலகிலேயே இக்காரை பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications








