எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் (Land Rover Discovery Metropolitan Edition) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

லேண்ட் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா மிரண்டுருவீங்க...

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர், அதன் டிஸ்கவரி சொகுசு கார் மாடலில் புதிய மெட்ரோபாலிடன் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமாக இக்காருக்கு 1 கோடியே 26 லட்சத்து 55 ஆயிரம் ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லேண்ட் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா மிரண்டுருவீங்க...

இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, காருக்கான புக்கிங் பணிகளையும் நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது. புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

லேண்ட் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா மிரண்டுருவீங்க...

இதன் பெட்ரோல் வெர்ஷனில் 3.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 355 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ், நான்கு வீல் இயக்கம் திறன் உள்ளிட்ட அம்சங்களும் இந்த வெர்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளன.

லேண்ட் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா மிரண்டுருவீங்க...

டீசல் வெர்ஷனில் 3.0 லிட்டர் டர்போ டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 296 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். இந்த மோட்டாரிலும் 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் அனைத்து வீல்களுக்கும் இயங்கு திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

லேண்ட் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா மிரண்டுருவீங்க...

லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசன் டாப் எண்ட் வேரியண்டாக காட்சியளிக்கின்றது. ஆகையால், சிறப்பம்சங்களுக்கு சற்றும் குறைவில்லாத வாகனமாக அது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 12.3 அங்குல திரை, சிக்னல் பூஸ்டர் அம்சம் கொண்ட ஒயர்லெஸ் சார்ஜிங், முன் பக்கத்தில் கூலர் கம்பார்ட்மென்ட், 4 க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிசனில் வழங்கப்பட்டுள்ளன.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா?.. Land Rover Discovery Metropolitan Edition விற்பனைக்கு அறிமுகம்!

இதுதவிர, ஹீட் மற்றும் குளிர்ச்சியை வழங்கக் கூடிய இருக்கைகள், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் என பல தரப்பட்ட அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏர் ப்யூரீஃபையர் காரின் கேபினை தூய்மையானதாக மாற்றி பாதுகாப்பானதாக ஆக்கும். அதாவது, வைரஸ், பாக்டீரியா, தூசி உள்ளிட்டவற்றை அது சுத்தம் செய்யும்.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா?.. Land Rover Discovery Metropolitan Edition விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், காரில் ரைடு செல்லும் அதிக எஞ்ஜாய்க்கு உதவும் வகையில் முன்பக்கத்தில் ஸ்லைடிங் டைப் சன்ரூஃபும், பின் பக்கத்தில் ஃபிக்ஸட் பனோரமிக் சன்ரூஃபும் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் டிஸ்கவர் மெட்ரோபாலிடன் எடிசன் முற்றிலும் படு கவர்ச்சியான வெர்ஷனாக விற்பனைக்கு வந்துள்ளது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா?.. Land Rover Discovery Metropolitan Edition விற்பனைக்கு அறிமுகம்!

இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹகுபா சில்வர் நிற பம்பர், 20 அங்குல சேடின் டார்க் கிரே அலாய் வீல்கள் மற்றும் கருப்பு நிற காலிபர்கள் இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 18, 2022, 20:26 [IST]
English summary
Land rover launches discovery metropolitan edition in india at inr 1 26 cr
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+