முதல் முறையாக 13.1 இன்ச் திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே தொடக்கம்!

அதிக சிறப்பு வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி (Land Rover Range Rover SV) எஸ்யூவி காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் புதிய ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி (Range Rover SV) எஸ்யூவி காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இன்று (ஜனவரி 27) முதலே இப்பணிகள் நாட்டில் தொடங்கப்படுகின்றது. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெறும் சொகுசு வாகனங்களில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்று.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அதிக சொகுசு, ஆடம்பரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கு பெயர்போனவையாக நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

இதனால்தான் முக்கிய பிரபலங்களின் விருப்பமான தேர்வாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளை விரும்புவோர்களை குறி வைத்து புதிய ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி காருக்கு லேண்ட் ரோவர் நிறுவனம் புக்கிங் பணிகளை தொடங்கியிருக்கின்றது.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

இக்காரை மிக சமீபத்தில் உலகளவில் வெளியீடு செய்த நிலையில் புக்கிங் பணிகளை லேண்ட் ரோவர் நாட்டில் தொடங்கியிருக்கின்றது. 2022 ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி சில கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களின் பிடித்தமான டேஸ்டிற்கு ஏற்ப காரின் தீம், டீடெயில்கள் மற்றும் மெட்டீரியல்களை மாற்றிக் கொள்ள முடியும்.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

இந்த எஸ்யூவி காரை லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் ஸ்பெஷல் வெஹிக்கிள் ஆபரேஷன்ஸ் வாயிலாகக் கட்டமைத்திருக்கின்றது. இதன் விளைவாக, வழக்கமான மற்றும் லாங் வீல் பேஸ் என இரு விதமான நிலைகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், ஐந்து இருக்கை வசதியுடன் லாங் வீல் பேஸில் கிடைக்கும் முதல் வெர்ஷனாகவும் இது மாறியிருக்கின்றது.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

4.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 523 எச்பி பவர் மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், 3.0 லிலட்டர் ஸ்ட்ரைட் 6 டீசல் எஞ்ஜின் தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 346 எச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி காரின் லாங் வீல் பேஸ் வேரியண்டை நான்கு இருக்கைகள் அமைப்பில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த அம்சத்தை வழங்கப்பட இருக்கின்றது.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

இதுமட்டுமின்றி மின்சாரத்தால் பன்படுத்தக் கூடிய கிளப் டேபிள் மற்றும் இன்டக்ரேட் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி, உட்புறத்தை இன்னும் பல மடங்கு பிரீமியமானதாக மாற்றும் வகையில் 13.1 இன்ச் அளவுள்ள பொழுதுபோக்கு திரைகல் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

முன்னதாக இதுபோன்று நீளமான திரையை எந்தவொரு ரேஞ்ஜ் ரோவர் காரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், 13.1 இன்ச் அளவுள்ளை திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் காராக இந்த எஸ்வி மாறியிருக்கின்றது. தொடர்ந்து, காரின் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை வழங்கும் வகையில் முன் பக்க க்ரில் மற்றும் பம்பர் மாற்றப்பட்டிருக்கின்றன.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

ஐந்து பார் க்ரில் மற்றும் புதிய தோற்றம் கொண்ட பம்பரே தற்போது ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி காரில் இடம் பெற்றிருக்கின்றது. மேலும், காரில் ஆடம்பர வசதிகளைக் கூட்டும் வகையில் ஸ்மூத்தான செராமிக்குகள், நிலையான மரங்கள் மற்றும் பளப்பளப்பான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதல் முறையாக 13.1 இன்ச் அளவுள்ள திரையை பெறும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எஸ்யூவி கார்... இந்த காருக்கான புக்கிங்கே இந்தியாவில் தொடக்கம்!

ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி 12 விதமான வீல் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் 23 இன்ச் அளவுள்ளவையாகும். டைமைண்ட் டர்ன்ட் டார்க் கிரே கிளாஸ் அலாய் வீல்களே வழங்கப்பட இருக்கின்றன. இதுமாதிரியான பன்முக வசதிகள் கொண்ட சொகுசு காருக்கே லேண்ட் ரோவர் தற்போது இந்தியாவில் புக்கிங் பணிகளை தொடங்கியிருக்கின்றது.

இக்காரின் விலை விபரம் பற்றிய தகவல் கீழே பட்டியலாக:

வேரியண்டுகள் 4.0 லிட்டர் பெட்ரோல் 3.0 லிட்டர் டீசல்
SE ₹2.46 crore ₹2.31 crore
HSE ₹2.71 crore ₹2.56 crore
Autobiography ₹3.05 crore ₹2.90 crore
First Edition ₹3.25 crore ₹3.13 crore
LWB SE ₹2.64 crore ₹2.49 crore
LWB HSE ₹2.87 crore ₹2.72 crore
LWB Autobiography ₹3.21 crore ₹3.06 crore
LWB First Edition ₹3.41 crore ₹3.29 crore

More from DriveSpark

Article Published On: Thursday, January 27, 2022, 17:47 [IST]
English summary
Land rover range rover sv suv bookings opens in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+