இந்தியாவில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த லெக்சஸ்... கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பரான சலுகைகள் அறிவிப்பு!
லெக்சஸ் (Lexus) நிறுவனம் இந்தியாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கின்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பரான சலுகைகளை அது அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பான் நாட்டை தாயகமாகக் கொண்டு இயங்கும் சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்களில் லெக்சஸ் (Lexus) நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கின்றது. இந்த நிகழ்வை நிறுவனம் விழாவாகக் கொண்டாட தொடங்கியிருக்கின்றது.

மேலும், இந்த உற்சாகத்தின் ஒரு பகுதியாக நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக சில பிரத்யேக சலுகைகளை அறிவித்திருக்கின்றது. புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பைபேக் திட்டத்தையும், ஏற்கனவே லெக்சஸ் கார்களை பயன்படுத்தி வரும் இந்திய கஷ்டமர்களுக்காக லாயல்டி திட்டத்தையும் அது அறிவித்திருக்கின்றது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, பைபேக் திட்டம் லெக்சஸ் இஎஸ் 300எச் கார் மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மிக தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இந்த திட்டம் லெக்சஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்குமே பொருந்துமா என்பது தெளிவாக தெரியவில்லை.

பைபேக் திட்டத்தின்கீழ் வாங்கப்படும் இஎஸ் 300எச் காரை, அதன் உரிமையாளர் சுமார் 60 சதவீதம் மதிப்புடன் எதிர்காலத்தில் புதிய லெக்சஸ் சொகுசு காருடன் மாற்றிக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அதன் அனைத்து கார் மாடலுக்கும் கொடுத்தால் சூப்பராகதான் இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

நிறுவனம், 'லெக்சஸ் லைஃப்' முன் முயற்சியின்கீழ் சில லாயல்டி திட்டங்களையும் அறிவித்திருக்கின்றது. அதாவது, தற்போதுள்ள வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அடுத்த பர்சேஸின்போது சில சலுகைளை வழங்க இருப்பதாகவும், மேலும், பிரத்யேக சர்வீஸ் பேக்கேஜ்களை வழங்க இருப்பதாகவும் அது அறிவித்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி, லோ-காஸ்ட் ஃபைனான்ஸில் புதிய கார்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் லெக்சஸ் அறிவித்திருக்கின்றது. புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் இத்திட்டங்களை லெக்சஸ் வெளியிட்டிருக்கின்றது.

லெக்சஸ் நிறுவனம் அதன் லைஃப் திட்டத்தை 2021ம் ஆண்டில்தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வாயிலாக எண்ணற்ற சிறப்பு சேவைகளை நிறுவனம் வழங்கி வருகின்றது. ஃபைனான்ஸ், சர்வீஸ், வாரண்டி, இன்சூரன்ஸ் மற்றும் ரோட்-சைடு அசிஸ்டன்ஸ் உள்ளிட்டவற்றை அது வழங்கி வருகிறது.

இதுமட்டுமில்லைங்க, பயன்படுத்திய கார் சந்தையில் இருந்து வாங்கப்பட்ட லெக்சஸ் கார் பயன்பாட்டாளர்களுக்காகவும் சில சிறப்பு திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, கிண்டோ ஆஃப் லெக்சஸ் ஃபைனான்ஸின் கீழ் வாகனங்களை லீசுக்கு வழங்கும் செயலிலும் லெக்சஸ் ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








