யூஸ்டு கார் விற்பனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்திருக்கும் பிரபல நிறுவனம்! இவ்ளோ பலன்கள் கிடைக்குமா?
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் பயன்படுத்திய கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புதிய வாகனங்களை வாங்க இயலாதவர்கள் தங்களின் வாகன கனவை நிறைவேற்றிக் கொள்ள யூஸ்டு கார் சந்தையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சற்று குறைவான விலையில், தங்களுக்கு பிடித்தமான விலையுயர்ந்த கார்களைகூட வாங்கிக் கொள்ள முடியும்.

இதனால்தான் அடிதட்டு மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலர் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனைப் பிரிவை அதிகளவில் நாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு மிக சூப்பரான வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் புதிய வாகனங்களுக்கு கிடைப்பதைப் போலவே இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் தரமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

இதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் செகண்ட் ஹேண்ட் கார்கள் வர்த்தகத்தில் களமிறங்கிக் கொண்டிருக்கின்றனர். மாருதி சுஸுகி தொடங்கி மஹிந்திரா குழுமம் வரை பல முன்னணி நிறுவனங்கள் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லெக்சஸ் (Lexus)-ம் இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம் தற்போது அவர்களுடைய செகண்ட் ஹேண்ட் கார் பிரிவை வலுவாக்கும் விதமாக சிறப்பு திட்டம் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'லெக்சஸ் சர்டிஃபைட் ப்ரோக்ராம்' (Lexus Certified Programme) எனும் திட்டத்தையே அது அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டமானது, லெக்சஸ் நிறுவனத்தின் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனை பிரிவின் வாயிலாக காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பலநிலைகளில் பலனளிக்க இருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால், லெக்சஸ் நிறுவனம், அது விற்பனைக்கு வழங்கும் யூஸ்டு கார்கள் மீது அதிக நம்பிக்கையை இத்திட்டத்தின் வாயிலாக ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.

அது, பலநிலைகளில் யூஸ்டு வாகனங்களை ஆய்விற்கு உட்படுத்தி, அதன் தரநிலைகள் குறித்த தகவலையே சான்றாக வழங்க இருக்கின்றது. 203 புள்ளிகளின்கீழே இந்த ஆய்வை நிறுவனம் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் சான்றையே நிறுவனம் அதன் யூஸ்டு கார் பிரிவை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது.

இந்த சான்று வாடிக்கையாளர்கள் வாங்கவிருக்கும் வாகனம் எந்த மாதிரியான நிலையில் இருக்கின்றது என்பதை மிக தெளிவாகக் காண்பிக்கும். இந்த சான்றுடன் சேர்த்து அந்த குறிப்பிட்ட வாகனத்தின் சர்வீஸ் வரலாறுகள் மற்றும் உதிரி பாகங்கள் மாற்றப்பட்டிருக்கும் விபரங்கள் என அனைத்து வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது வாகனம் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும், லெக்சஸ் சர்டிஃபைட் ப்ரோக்ராம் திட்டத்தின்கீழ் வாங்கப்படும் யூஸ்டு கார்களுக்கு 24 மாதங்கள் அல்லது 30 ஆயிரம் கிமீ விரிவான உத்தரவாதத்தை வழங்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பயன்படுத்திய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த வாகனம்மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.

இதுதவிர, வாடிக்கையாளர்களைப் பாராட்டும் விதமாக மூன்று சிறப்பு சேவைகள் அடங்கி தொகுப்பையும் கஸ்டமர்களுக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. தன்னுடைய யூஸ்டு கார் விற்பனை பிரிவின் பக்கம் இந்தியர்களைக் கவரும்பொருட்டு இந்த திட்டத்தை லெக்சஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

அதிக பாதுகாப்பான மற்றும் உறுதியான கார்கள் தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக லெக்சஸ் இருக்கின்றது. அதுமட்டுமில்லைங்க நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக சொகுசு வசதிகள் நிறைந்ததாகவும் உள்ளன. இத்தகைய வாகனங்கள்மீதே கூடுதல் நம்பிக்கையை விதைக்கும் விதமாக நிறுவனம் சிறப்பு திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் முக்கிய தெரிவித்துள்ளார். லெக்சஸ் நிறுவனம் அண்மையில் அதன் சூப்பரான் எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 450 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications