மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

லெக்சஸ் என்எக்ஸ் 350எச் (Lexus NX 350h) ஹைபிரிட் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை மற்றும் பிற சிறப்பு வசதிகள் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

லெக்சஸ் (Lexus) நிறுவனம் இந்திய சொகுசு கார் பிரிவை அலங்கரிக்கும் வகையில் அதன் 2022 என்எக்ஸ் 350எச் (NX 350h) காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் இந்த காருக்கு நாட்டில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. எரிபொருள் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் ஓடும் திறனை இந்த கார் கொண்டிருக்கின்றது.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

இதன் காரணத்தினாலேயே இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் இக்காருக்கு பன்மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட்டது. என்எக்ஸ் 350 எச் எக்ஸ்க்யூசைட் (NX 350h Exquisite), என்எக்ஸ் 350 எச் லக்சூரி (NX 350h Luxury) மற்றும் என்எக்ஸ் 350 எச் எஃப்-ஸ்போர்ட் (NX 350h F-Sport) ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

இதில், எக்ஸ்க்யூசைட் வேரியண்ட் ஆரம்ப நிலை தேர்வாகவும், லக்சூரி நடு நிரை தேர்வாகும், எஃப்-ஸ்போர்ட் உயர்நிலை வேரியண்டாகவும் காட்சியளிக்கின்றது. ரூ. 64.9 லட்சம் தொடங்கி ரூ. 71.6 லட்சம் வரையிலான விலையில் 2022 என்எக்ஸ் 350எச் கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

விலை விபரம்:

Lexus NX Price
Exquisite ₹64,90,000
Luxury ₹69,50,000
F-Sport ₹71,60,000
மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

இந்த காருக்கு இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்முக சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் 2022 லெக்சஸ் என்எக்ஸ் 350எச் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனை இரண்டாம் தலைமுறை வெர்ஷன் என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடுகின்றது.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

இந்த வெர்ஷனை போன வருடமே உலகளவில் லெக்சஸ் அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால், இப்போதே இந்திய சந்தையில் அது விற்பனைக்கு வந்ததிருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து மிக விரைவில் என்எக்ஸ் 350எச் காரின் டெலிவரி பணிகளைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

புதுப்பித்தலின் அடிப்படையில் பன்முக சிறப்பு வசதிகள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல்கள் உடன் கூடிய ஒற்றை துண்டு அமைப்புடைய ஹெட்லேம்ப், கூடுதல் கட்டுமஸ்தான பாடி பேனல்கள், புதிய ஸ்டைலிஷான டேஷ்போர்டு, 14 இன்ச் அளவுள்ள தொடு திரை, வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

இதுமட்டுமின்றி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ்-அப் திரை, டிஜிட்டல் சாவி (ஸ்மார்ட் போனை கொண்டே காரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்), டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர், ஹீட் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், தானியங்கி ஹெட்லேம்ப், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், சன்ரூஃப் போன்ற பன்முக பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

பாதுகாப்பு அம்சங்களாக எட்டு ஏர் பேக்குகள், லேன் சேஞ்ஜ் அசிஸ்ட், ஸ்டியரிங் அசிஸ்ட் வசதியுடன் கூடிய லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, டிராஃபிக் அலர்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ரேடார் தொழில்நுட்பம் கொண்ட க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் லெக்சஸ் என்எக்ஸ் 350எச் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

எஞ்ஜினைப் பொருத்தவரை இக்காரில் 2.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மேலே கூறியதைப் போல் மின் மோட்டார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 235 எச்பி பவரை வெளியேற்றும்.

மின்சாரம்-பெட்ரோல் ரெண்டிலும் ஓடும் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... ஆச்சரியமளிக்கும் விலையில்!

இத்துடன், 55 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 259 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் இயக்கத்தை சிறப்பானதாக மாற்றும் வகையில் பேடில் ஷிஃப்டர்கள் கொண்ட எலக்ட்ரானிகலி கன்ட்ரோல் சிவிடி ஆட்டோமேட்டிக் கருவியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய 2022 லெக்சஸ் என்எக்ஸ் 350எச் சொகுசு கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வால்வோ எக்ஸ்சி 60, ஆடி க்யூ5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 9, 2022, 12:48 [IST]
English summary
Lexus launched 2022 nx 350h in india at rs 64 9 lakh
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+