வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

லெக்சஸ் என்எக்ஸ் 350எச் சொகுசு கார் அறிமுக தேதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லெக்சஸ், விரைவில் புதுமுக கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக கவர்ச்சியான மாடலாக அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என்எக்ஸ் 350எச் எனும் காரையே நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

இந்த காரில் சிறப்பு வசதியாக பெட்ரோல் மோட்டாருடன் சேர்த்து மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டாருக்கான மின்சார திறனை வழங்குவதற்காக பிரத்யேகமாக சிறிய பேட்டரி பேக் ஒன்றையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவே என்எக்ஸ் 350எச் சொகுசு கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

எனவேதான் இதன் வருகை பலரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, தொழிலதிபர்கள் மத்தியில் இக்காருக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. மின்சார இயக்கம் மற்றும் பெட்ரோல் இயக்கம் ஆகிய இரண்டையும் விரும்புவோர்களையும் இது கூடுதலாக கவர தொடங்கியிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

இந்த நிலையிலேயே 2022 லெக்சஸ் என்எக்ஸ் 350எச் காரின் வருகை விபரம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் இக்காரை வரும் மார்ச் 9ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எக்ஸ்க்யூசைட் (Exquisite), லக்சுரி (Luxury) மற்றும் எஃப்-ஸ்போர்ட் (F-Sport) உள்ளிட்ட தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிக நீளம், அதிக அகலம் மற்றும் உயரமானதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் நீளம் 4,660 மி.மீட்டராகவும், அகலம் 1,865 மி.மீட்டராகவும், உயரம் 1,660 மி.மீட்டராகவும் இருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

இதன் வீல் பேஸும் சற்று அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அது 2,690 மிமீட்டராக இருக்கின்றது. இந்தியாவின் கரடு, முரடான சாலையைச் சமாளிக்க இது போதும் என கூறப்படுகின்றது. முந்தைய ஜெனரேஷனைக் காட்டிலும் இந்த அளவுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. 2022 லெக்சஸ் என்எக்ஸ் 350எச் ஓர் மாடர்ன் எஸ்யூவி ரக காராகும்.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

ஆகையால், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இக்கார் எந்தவித குறைச்சலுமின்றி காணப்படுகின்றது. எல்இடி ஹெட்லைட், பகல்நேர மின் விளக்கு 'எல்' வடிவ பின் பக்க மின் விளக்கு, புதிய அலாய் வீல்கள் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

காரின் கேபினை அலங்கரிக்கும் வகையில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் திரை, புதிய பொத்தான்கள், ஹெட்ஸ்-அப் திரை மற்றும் ட்யூவல் டோன் கலர் தீம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. லெக்சஸ் நிறுவனம் இந்த காரை டொயோட்டாவின் பிரபல டிஎன்ஜிஏ-கே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே உருவாக்கியிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

இதன் வாயிலாகவே முன்பைக் காட்டிலும் அளவிலும் அதிகமானதாகவும், கவர்ச்சியானதாகவும் உருவாக்கியிருக்கின்றது, லெக்சஸ். இக்காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக லெதர் இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆம்பிசியண்ட் மின் விளக்கு, பவர் அட்ஜெஸ்டபிள் முன்பக்க இருக்கை மற்றும் கூடுதல் க்ளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

மேலும், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு போன்ற தொழில்நுட்ப வசதிகளும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்ஜினைப் பொருத்தவரை இக்காரில் 2.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு 4 சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

இத்துடன், ஏற்கனவே கூறியதைப் போல் இக்காரில் மின் மோட்டார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 235 எச்பி பவரை வெளியேற்றும். இத்துடன், மின் மோட்டாரை 55 கிமீ தூரம் வரை இயங்கச் செய்கின்ற வகையில் ஓர் சிறிய பேட்டரி பேக்கும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... மின்சாரம்-பெட்ரோல் எதுல வேணாலும் ஓட்டிக்கலாம்!

ஆகையால், தேவை என்றால் மின்சார காராகவோ அல்லது பெட்ரோல் காராகவோ லெக்சஸ் என்எக்ஸ் 350எச் காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வால்வோ எக்ஸ்சி 60, ஆடி க்யூ5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 உள்ளிட்ட கார்களுக்கு என்எக்ஸ் 350எச் காரின் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது.

குறிப்பு: முதல் 7 படங்கள் பழைய வெர்ஷன் என்எக்ஸ் 350எச் சொகுசு காரின் படங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2022, 16:21 [IST]
English summary
Lexus reveals nx 350h luxury suv india launch date
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+