பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

லெக்சஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

லெக்சஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் (Lexus RZ Electric) கார் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள ஆர்இஸட் காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஆர்இஸட் 450இ (RZ 450e) என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கிடைக்கும்.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், ட்யூயல்-மோட்டார் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தம் புதிய டைரக்ட்4 ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டமும் (Direct4 All-wheel-drive System) கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆக்ஸிலிலும் தலா ஒன்று என இரண்டு மோட்டார்களை இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

முன் பகுதி ஆக்ஸிலில் உள்ள மோட்டார் 201 பிஹெச்பி பவரையும், பின் பகுதி ஆக்ஸிலில் உள்ள மோட்டார் 107 பிஹெச்பி பவரையும் உருவாக்கும். இந்த வகையில், ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஒட்டுமொத்த பவர் அவுட்புட் 308 பிஹெச்பி மற்றும் 435 என்எம் டார்க் ஆகும். லெக்சஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.6 வினாடிகளில் எட்டி விடும்.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லெக்சஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 71.4kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 450 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என லெக்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

நடைமுறை பயன்பாட்டில் இந்த எண்கள் சற்று குறையலாம் என்றாலும், இது மிக சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் என்பதில் சந்தேகம் இல்லை. லெக்சஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 4,805 மிமீ ஆகும். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அகலம் 1,895 மிமீ ஆகவும், உயரம் 1,635 மிமீ ஆகவும் இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,850 மிமீ ஆகும்.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

பக்கவாட்டில் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பெரிய வீல் ஆர்ச்சுகள் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் கூடுதல் அழகை கூட்டுகின்றன. அதே சமயம் 18 மற்றும் 20 இன்ச் அளவுகளில் அலாய் வீல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்தது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உட்புறத்தில், 14.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

மேலும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியையும் லெக்சஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. சாலையில் இருந்து டிரைவரின் கவனம் சிதறாமல் இருக்க இந்த வசதி உதவி செய்யும். முக்கியமான தகவல்களை, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மூலமாக டிரைவர் எளிமையாக பார்த்து கொள்ளலாம். இதுபோல் இன்னும் பல்வேறு வசதிகளையும் லெக்ஸஸ் ஆர்இஸட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்திய சந்தையை பொறுத்தவரையில் டாடா, எம்ஜி, ஹூண்டாய் போன்ற பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்து வருகின்றன. ஆடி போன்ற சொகுசு கார் நிறுவனங்களும் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

ஆடி நிறுவனத்தின் இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Audi e-tron Electric SUV) காரை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு சமீபத்தில் வாங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மிகவும் விலை உயர்ந்த இந்த காரை மகேஷ் பாபு வாங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரமாதமா இருக்கு... சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிலோ மீட்டர் ஓடுமா?

மகேஷ் பாபுவை தொடர்ந்து இன்னும் பல்வேறு பிரபலங்களும் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய சந்தையில் நிறைய முன்னணி நிறுவனங்கள், பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. எதிர்காலத்தில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களையும் நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2022, 20:44 [IST]
English summary
Lexus rz electric suv unveiled here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+