பொங்கலுக்கு இந்த கார்களை வாங்கினா வருஷம் முழுவதுமே தித்திப்பான அனுபவம்தான்! எல்லாமே நல்ல மைலேஜ் தரும் கார்கள்!

ஆண்டு முடிவின் சிறப்பாக இந்த ஆண்டில் வாகனம் உலகம் சார்ந்து நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றோம். அந்தவகையில், நடப்பு 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த அதிகம் மைலேஜ் தரும் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் போதும் இந்தியர்கள் புதிய வாகனங்களை வாங்கி குவித்து விடுவார்கள். அந்தவகையில், நம்மில் பலர் வரும் பொங்கல் பண்டிகையை புதிய காருடன் கொண்டாட பிளானில் உள்ளனர். இவர்களுக்கு உதவும் விதமாக நடப்பு 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த அதிகம் மைலேஜ் தரும் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். ஆண்டு முடிவின் சிறப்பாக இந்த ஆண்டில் வாகனம் உலகம் சார்ந்து நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றோம். அந்தவகையிலேயே இந்த தகவலையும் நாங்கள் வெளியிட்டு உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மைலேஜ்

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser Hyryder)

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டதே கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மாடல்கள் ஆகும். இந்த இரு கார் மாடல்களும் ஒரே மாதிரியான அம்சம் மற்றும் மோட்டார் தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், இவற்றின் மைலேஜ் திறனும் ஒரே மாதிரியானதாக உள்ளது. லிட்டர் ஒன்றிற்கு 27.97 கிமீ வரையில் இது மைலேஜ் தரும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என இரு விதமான ஹைபிரிட் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV)

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய இரு கார் மாடல்களுக்கு அடுத்தபடியாக அதிக மைலேஜ் தரும் கார் மாடலாக ஹோண்டா சிட்டி இ:எச்இவி உள்ளது. இதன் மைலேஜ் திறனுக்கு இதில் வழங்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பமே முக்கிய காரணமாக உள்ளது. லிட்டர் ஒன்றிற்கு 26.5 கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்ட காரே இந்த ஹோண்டா சிட்டி இ:எச்இவி. தற்போது விற்பனையில் இருக்கும் நான்காம் தலைமுறை மற்றும் ஐந்தாம் தலைமுறை சிட்டி கார் மாடல்களைக் காட்டிலும் மிக அதிக வசதிகள் மற்றும் மைலேஜ் தரக் கூடியதாக இது இருக்கின்றது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Alto K10)

மேலே இரு கார் மாடல்களிலும் ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், அவற்றின் மைலேஜ் திறன் கற்பனைக்கு எட்ட முடியாததாக இருக்கின்றது. ஆனால், தற்போது நாம் பார்க்க உள்ள ஆல்டோ கே10 கார் மாடலில் இதுபோன்று எந்த அம்சத்தையும் நம்மால் காண முடியாது. இருப்பினும், இதன் மைலேஜ் திறன் மிக அதிகமா உள்ளது. 2022இல் விற்பனைக்கு வந்த மூன்றாவது அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக இது இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 16.56 கிமீ தொடங்கி 24.90 கிமீ வரையில் மைலேஜ் தரும். இதன் சிஎன்ஜி தேர்வோ இதைவிட அதிகமாக ஒரு கிலோவிற்கு 33.85 கிமீட்டர் வரை மைலேஜ் தரும்.

மாருதி சுஸுகி பலினோ (Maruti Baleno)

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2022 ஆம் ஆண்டில் பலினோவின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கியது. இது ஒரு லிட்டருக்கு 22.35 கிமீ தொடங்கி 22.94 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறன் கொண்டது ஆகும். அதேவேளையில் இதன் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 30.61 கிமீ வரையில் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றது. இந்தியாவின் பிரீமியம் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக காராக பலினோ இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.49 லட்சம் ஆகும்.

கியா கேரன்ஸ் (Kia Carens)

இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட எம்பிவி ரக காருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த வரவேற்பை தன் பக்கம் வளைத்து போடும் விதமாக கியா நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்த எம்பிவி ரக காரே கேரன்ஸ் ஆகும். மாருதி சுஸுகியின் எர்டிகா, எக்ஸ்எல் 6 மற்றும் ரெனால்ட் ட்ரைபர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இது நடப்பாண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இந்த கார் மாடலின் டீசல் மோட்டார் 18.4 கிமீட்டர் முதல் 21 கிமீ வரையிலும், பெட்ரோல் தேர்வு 15.4 கிமீ தொடங்கி 16.5 கிமீ வரையிலும் மைலேஜ் தரும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Brezza)

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எனும் காரையே அப்டேட்டிற்கு பின்னர் பிரெஸ்ஸா எனும் பெயரில் மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் வருகையும் நடப்பாண்டின் தொடக்க காலத்திலேயே அரங்கேறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அப்டேட் வெர்ஷனில் 1.5 லிட்டர் மோட்டார் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே இக்காரை பெஸ்ட் மைலேஜ் வழங்கும் காராக மாற்றி இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 20 கிமீ வரை மைலேஜ் தரும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross)

தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் அதிக இட வசதி மற்றும் மைலேஜ் தரும் காராக இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா உருவாக்கி இருக்கின்றது. இதன் உச்சபட்ச மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 23.4 கிமீ ஆகும். ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் இன்னோவா ஹைகிராஸ் வழங்கும் மைலேஜ் திறனே இது ஆகும். வழக்கமான பெட்ரோல் இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 16.13 கிமீ மைலேஜை வழங்கும். இந்த காருக்கு அறிமுகமாக ரூ. 18,30,000 - ரூ. 28,97,000-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் ஆகும்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti XL6)

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்எல்6 கார் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. மைல்டு ஹைபிரிட் அம்சத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 கிமீ வரையில் மைலேஜ் தரும். இதே கார் மாடலை சிஎன்ஜி வெர்ஷனிலும் மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.32 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2022, 6:34 [IST]
English summary
List most fuel efficient cars launched in 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+