ஃபோர்டு போலவே தலையில் துண்டை போட்டு வெளியேறிய நிறுவனங்கள் எத்தனை தெரியுமா?
இந்தியாவில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு தற்போது ஃபோர்டு நிறுவனம் செய்தது போலவே இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். எந்தெந்த நிறுவனங்கள் இப்படியாக வெளியேறியுள்ளன? இதுவரை உலக அளவில் பிரபலமான 6 நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. இது குறித்த விரிவாக தகவல்களை காணலாம் வாருங்கள்

ஃபோர்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு சந்தித்த பெரும் நஷ்டத்திற்குப் பிறகு இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தது கடந்த 2021 அக்டோபர் மாதம் குஜராத் ஆலையை மூடிய நிலையில் வரும் 31ம் தேதி முதல் சென்னை ஆலையையும் மூடுகிறது. இந்நிலையில் இந்த ஆலையில் கடைசி காரையும் தயார் செய்து பிரியாவிடை கொடுத்த செய்திகள் எல்லாம் அதிகமாகப் பரவின.

அடுத்தகட்டமாக ஃபோர்டு நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவிற்குள் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ஃபோர்டு போலப் பல நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக இதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளன. அப்படி எந்தெந்த நிறுவனங்கள் வெளியேறியுள்ளது? வாருங்கள் காணலாம்

ஜெனரல் மோட்டார்ஸ்
அமெரிக்காவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் ஜெனரல் மோட்டார். இந்நிறுவனம் 1996ல் இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்நிறுவனம் செவரலேட், ஓப்பல் ஆகியவற்றுடன் இணைந்து கார்களை தயாரித்து விற்பனை செய்தது. இந்நிறுவனத்தின் சேவரலேட் க்ரூஸ், டவேரா ஆகிய கார்கள் இன்றும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. ஆனால் இந்நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டது.

ஃபியட்
இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனமும் இந்தியாவிற்குள் 90களிலேயே வந்துவிட்டன. இந்நிறுவனம் வரும்போதே மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. இந்நிறுவனம் கடைசியாக ஃபியட் புன்டோ, லினியா எனத் தனித்துவமான கார்களை தயாரித்து விற்பனை செய்தது. ஆனால் காலம் செல்ல செல்ல ஃபியட் கார்களில் புதிய அம்சங்கள் இல்லை. அதிக மைலேஜ் இல்லை. அந்நிறுவனம் இந்திய மார்கெட்டிற்கு புதிய கார்களை கொண்டு வரவில்லை இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இந்நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்து கடந்த 2020 மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக வெளியேறியது.

டேவூ
சிறிய கார்களை அறிமுகம் செய்து இந்தியா மார்கெட்டில் நல்ல பெயரைப் பெற்ற நிறுவனம் டேவூ,இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான டேவூ மாடீஸ் மக்கள் மத்தியில் பிரபலம். இந்நிறுவனம் 90களில் இந்தியாவிற்குள் நுழைந்த நிலையில் 1999 இறுதியில் இந்நிறுவனம் டேவூ க்ரூம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் இந்நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு டேவூ பிராண்டை இந்தியாவில் நிறுத்தியது. ஆனால் அந்நிறுவனம் மார்டீஸ் கார் சேவரலேட் ஸ்பார்க் என்ற பெயரில் மீண்டும் இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓபல்
ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவிற்குள் கடந்த 1996ம் ஆண்டு வரும் போது ஓபல் பிராண்ட் உடன் தான் வந்தது. இந்நிறுவனம் 1996 முதல் 2003 வரை அஸ்ட்ரா என்ற காரையும், 2003-2005 வெக்ட்ரா என்ற காரையும், 2003-2006 கார்ஸா என்ற காரையும் விற்பனை செய்தது.எதுவுமே எதிர்பாராத விற்பனையைப் பெறாத நிலையில் தான் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஓபல் பிராண்டை 2006ம் ஆண்டு நிறுத்திவிட்டு செவரலேட் பிராண்டில் வாகனங்களை வெளியிடத் துவங்கியது.

யூஎம் மோட்டார் சைக்கிள்
அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனம் தான் யூஎம். இந்நிறுவனம் இந்தியாவில் லோஹியா ஆட்டோ என்ற நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிளைத் தயாரித்து வந்தது. ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியாக வாகன தயாரிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் லோஹியா ஆட்டோ மற்றும் யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகக் கடந்த 2019 அக்டோபர் மாதம் யூஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறியது. இந்நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுத்தவர்களுக்கு ரூ150 கோடி வரை நஷ்டம்

க்ளீவ்லேண்ட் மோட்டார் சைக்கிள்
இந்நிறுவனம் மிகக் குறுகிய காலம் மட்டுமே இந்தியாவில் இரந்தது. கடந்த 2018ம் ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் தனது இந்திய வருகையை உறுதி செய்தது. கஸ்டமைஸ்டு பைக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ள. இந்நிறுவனம் அதற்காக லைஸ்-மாடிசன் மோட்டார்வெர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதமே இந்நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டது.


Click it and Unblock the Notifications








