இன்னும் 6 மாசத்துல இந்த கார் எல்லாம் காணாம போயிடும்... வாங்குறதா இருந்தா இப்பவே வாங்கிடுங்க...
இந்தியாவில் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டமாக ரியல் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாட்டு வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாசு கட்டுப்பாட்டில் தகுதியிழக்கும் சில டீசல் இன்ஜின் கார்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுத்தப்படவுள்ளன. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள வாகன தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே அவர்கள் வாகனங்களை தயாரிப்பதை விட அதிலிருந்து வெளியாகும் மாசுவை கண்ட்ரோல் செய்வது தான். தற்போது இந்தியாவில் பிஎஸ்6 மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த விதிமுறை கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த நடைமுறைமலுக்கு வரும்போதோ பல நிறுவனங்கள் தங்கள் கார் தயாரிப்புகளின் எண்ணிக்கையை சுருக்கினர்.

குறிப்பாக பல நிறுவனங்கள் டீசல் இன்ஜின் கார்களின் தயாரிப்பையே கைவிட்டனர். பெட்ரோல்இன்ஜின் வாகனங்களை மட்டும் தயாரிக்க துவங்கினர். பல நிறுவனங்கள் மாற்ற வழியாக ஹைபிரிட் முறைக்கு மாற
துவங்கினர். இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி ரியல் டைம் டிரைவிங் எமிஷன் என்ற விதி அமலுக்கு வரவுள்ளது.

இந்த விதிமுறையான தற்போது மார்கெட்டில் உள்ள டீசல் இன்ஜின் கார்கள் இந்த மாசு கட்டுப்பாட்டுக்கு தகுதியில்லாமல் நிறுத்தப்படும் நிலையில் இருக்கிறது. தற்போது பெரும்பாலானா கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களில் தங்களின் கவனத்தை திருப்பியதால் இனி டீசல் இன்ஜின் கார்கள் மெல்ல மெல்ல மறைந்து போகும் என கூறப்படுகிறது.

வரும் 2023ம் ஆண்டு வரப்போகும் ரியல் டிரைவிங் எமிஷனில் ஒத்துப்போகாத பல டீசல் இன்ஜின் கார்கள் நிறத்தப்பட போகிறது. இந்த பட்டியலில் முதலில் இருப்பது ஹூண்டாய் ஐ20 கார்கள் தான். இந்த கார் 2 பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இதில் டீசல் இன்ஜின் கார் வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு விற்பனைக்கு வராது என கூறப்படுகிறது.

இதனால் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் டாடா ஆல்ட்ராஸ் கார் தான் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட ஒரே காராக இருக்கும் என கூறப்படுகிறது. ஹூண்டாய் டீசல் இன்ஜினை மேம்படுத்த எந்த முயற்சியையும் எடுக்க வில்லை. டீசல் மற்றும் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதால் டீசலை விட பெட்ரோல் இன்ஜின் கார்களின் விற்பனை தான் அதிகமாக இருக்கிறது. டீசல் கார்களை மக்கள் அதிகம் விரும்ப வில்லை என்பதால் ஹூண்டாய் பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

அடுத்ததாக ஹூண்டாய் நிறுவனத்தன் வென்யூ கார் இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியன்ட் இருக்கிறது. இந்த கார் பிஎஸ்6 ரியல் டைம் டிரைவிங் எமிசன் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்றால் அதிக விலை கொண்டே கேட்டலிக் ரெடியூஷன் சிஸ்டத்தை பின்பற்ற வேண்டும்.

அதனால் காரின் விலை மிக அதிகமாகும், இதனால் இந்த காரிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் நிறத்தப்படவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியே டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருந்தாலும் விலை அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்ததாக ஹோண்டா நிறுவனம் தான் பயன்படுத்தி வரும் 1.5 லிட்டர் ஐவிடெக் டீசல் இன்ஜினை பிஎஸ் 6 ரியல் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாட்டிற்கு தகுந்தால் போல மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இன்ஜின் தான்.

ஹோண்டா சிட்டி, டபிள்யூஆர்வி க்ராஸ்ஓவர், அமேஸ் மற்றும் அந்நிறுவனம் புதியதாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள காம்பேக்ட் எஸ்யூவி கார்களிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனையிலிருந்து ஹோண்டா தப்பிவிடும் என்று தான் கூறப்படுகிறது. இந்த விபரம் எல்லாம் அதிகாரபூர்வமிக்க தகவல் இல்லை என்றாலும் தொழிற்நுட்ப ரீதியிலும், தற்போது வெளியாகும் செய்திகளை வைத்து கணிக்கப்பட்ட தகவல்களாகும்.


Click it and Unblock the Notifications








