சென்னை, பெங்களூரு மாதிரி சிட்டில இருக்குறவங்க இந்த கார எல்லாம் மிஸ் பண்ணீடாதீங்க! ரெம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!

இன்று சென்னை, பெங்களூரு போன்ற நெருக்கடியான நகரங்களில் சுலபமாக ஓட்டுவதற்கான ஏற்ற கார்களின் பட்டியலைத் தான் இங்கே காணப்போகிறோம்.

சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும். இங்கு பெரிய பெரிய கார்களை வைத்துக்கொண்டு சாலை நெருக்கடியில் ஓட்டுவது சிரமமான விஷயம் சிறிய கார்கள் தான் சிட்டி பயணத்திற்குச் சிறந்த கார்கள்.

சென்னை, பெங்களூரு மாதிரி சிட்டில இருக்குறவங்க இந்த கார எல்லாம் மிஸ் பண்ணீடாதீங்க! ரெம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!

சிறிய கார்கள் தான் பார்க்கிங் செய்வதற்கும் எளிமையாக இருக்கும் அநேக இடங்களில் போக்குவரத்துக்கு நெருக்கடியின்றி காரை பார்க் செய்ய முடியும். பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கிலும் சிரமம் இல்லாமல் ஓட்ட ஓடியும். இந்த செய்தியில் இப்படியாக மார்கெட்டில் உள்ள சிறிய ரக கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

ஆல்டோ 800

மாருதி நிறுவனம் விற்பனை செய்யும் இந்த கார்இந்தியாவிலேயே குறைந்த விலை காராகும். ரூ3.39 லட்சம் முதல் இந்த கார் விற்பனையாகிறது. இந்த காரின் நீளம் 34455 மிமீ, அகலம் 1515 மிமீ, டர்னிங் ரேடியன் 4.6 மீட்டர்கள். இந்த காரில் 800 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 22.05 கி.மீ மைலேஜ் தரும். இந்த கார் 2 ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஆகியன இருக்கிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட் ஆப்ஷன்கள் இருக்கிறது.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ

மாருதி நிறுவனத்தின் இந்த காரையும் சிட்டியில் எளிமையாக ஓட்டலாம். உயரமான அதே நேரத்தில் சிறிய காரை விரும்புபவர்களுக்கு இந்த கார் சிறந்த சாய்ஸ், இந்த காரின் நீளம் 3565 மீமீ, அகலம் 1520 மிமீ, 1567 மீமீ உயரம், இந்த காரின் டர்னிங் ரேடியஸ் 405 மீட்டர். இந்த காரில் 998 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரிலும் இபிடியுடன் கூடிய ஏபிடிஎஸ், சீட்பெல்ட் ரிமைன்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சென்டரல் லாக், ஏர்பேக்குககள், ஆகியன இருக்கிறது. இந்த கார் ரூ4.25 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

டட்சன் ரெடிகோ

டட்சன் நிறுவனம் வெளியிடும் ரெடிகோ காரும் டிராஃபிக்கில் ஓட்ட சிறந்த கார் இந்த காரில் 800 சிசி 1லி இன்ஜின் பொருத்தப்பட்டள்ளது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டிரைவர் ஏர்பேக், ரியர் டோர் சைல்டு சேஃப்டி லாக், ஓவர் ஸ்பீடு வார்னிங், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய வசதிகள் இருக்கின்றனர். இந்த கார் ஒரு லிட்டருக்கு 20.71 கி.மீ வரை மைலேஜை வழங்கும். இந்த கார் 3435 மிமீ நீளமும், 1574 மிமீ அகலமும், டர்னிங் ரேடியஸ் 4.7 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த காரின் விலை ரூ3.83 லட்சம் முதல் விற்பனையாகிறது.

ரெனால்ட் க்விட்

ரொனால்ட் நிறுவனத்தின் க்விட் காரும் டிராஃபிக்கில் ஓட்ட சிறந்த கார் தான். இந்த கார் 800 சிசி 1 லிட்டர் இன்ஜினை கொண்டது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களை கொண்டது. ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்ட் 22 கி.மீ வரை மைலேஜை வழங்குகிறது. மேனுவல் கியர் வேரியன்ட் 22.02 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ4.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 15, 2022, 10:59 [IST]
English summary
List of cars Best For City traffic and budget friendly
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+