2022ல் இந்த கார் எல்லாம் செம ஹிட்! பட்டியலில் உங்களுக்கு பிடித்த காரும் இருக்குது!
2022ம் ஆண்டு அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான கார்களின் பட்டியலை தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம். இது குறித்த விரிவாக தகவல்களை காணலாம் வாருங்கள்.
2022ம் ஆண்டு முடிய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன. இப்பொழுது தான் புத்தாண்டு பிறந்தது போல இருக்கிறது அதற்கும் நாம் வருட முடிவிற்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கே அற்புத ஆண்டாக கருதலாம். கொரோனா காலத்தில் விற்பனையில் பெரும்பின்னடைவை சந்தித்த நிலையில் 2022ம் ஆண்டு தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொரோனா காலத்திற்கு முந்தைய அளவிற்கு விற்பனையை எட்டி பிடித்துள்ளது.

இந்நிலையில் நாம் இந்த பதிவில் 2022ம் ஆண்டில் புதிதாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் அடித்த கார்களின் பட்டியலை தான் காணப்போகிறோம். அதற்கு முன்பு 2022ம் ஆண்டு என்பது ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள ஆண்டு இந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகம், ஹைபிரிட் கார்கள் குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வு என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துள்ளது.
சரி இந்தாண்டு அறிமுகமாகி மக்கள் மத்தியில்பெரும் வரவேற்ப்பை பெற்ற கார் ஸ்கார்பியோ என் கார் தான். மாருதி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்த கார் ஸ்கார்பியோ காரின் அடுத்த வெர்ஷனாகும். இந்த கார் மார்கெட்டில் ரூ 11.99 லட்சம் முதல் ரூ12.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகிறது. இந்த காருக்கு எந்த அளவிற் வரவேற்பு இருக்கிறது என்றால் இந்த கார் அறிமுகமான 30 நிமிடங்களில் சுமார் 1 லட்சம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டனர். தற்போது பலர் இந்த காரை புக் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கின்றனர்.
ஹூண்டாய் டுஸான்
ஹூண்டாய் டுஸான் கார் முன்பே அறிமுகமாகியிருந்தாலும் இந்தாண்டு இதன் ஹைபிரிட் வெர்ஷன் அறிமுகமானது. இந்த காரின் முக்கியமான அம்சம் என்றால் இந்த காரில் உள்ள 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் தான். இது போக இந்த காரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் சீட்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் சார்ஜர், போஸ் அடியோ சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
கிராண்ட் விட்டாரா
மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் எந்த அளவிற்கு மார்கெட்டில் சக்ஸஸ் என்பதை உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த காரை வாங்க மக்கள் போட்டி போட்டுவருகின்றனர். இந்த கார் மார்கெட்டில் ரூ10.45 லட்சம் முதல் ரூ19.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் ஸிக்மா, டெல்டா, ஆல்ஃபா, ஸிட்டா, மற்றும் ஸிட்டா ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இந்த காரை மாருதி நெக்ஸா அவுட்லெட்டில் மட்டுமே வாங்க முடியும்.
டொயோட்டா ஹைரைடர்
மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரின் டொயோட்டா எடிசன் தான் இந்த ஹைரைடர் கார். இந்த கார் ஹைபிரிட்தொழிற்நுட்பத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ15.11 லட்சம் என்ற ஆரம்ப விலையிலிருந்து ரூ18.99 லட்சம் என் விலை வரை மார்கெட்டில் விற்பனையாகிறது. இந்த கார் மொத்தம் 4 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த 4 கார்கள் தான் இந்தியாவில் இந்தாண்டு அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட்டடித்த கார்கள்.
இந்த கார்கள் எல்லாம் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் கார்கள். இது போக இந்தாண்டு அறிமுகமாகி உங்களின் மனதை கவர்ந்த கார் ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள். மேலும் உங்களுக்கு குறிப்பிட்ட காரை ஏன் பிடித்திருக்கிறது என்பதையும் குறிப்பிடுங்கள். இது போக 2023ம் ஆண்டை கலக்க ஏராளமான கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அப்படி 2023ல் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் கார் எது என்பதையும் கமெண்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








