கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த பிரபலமான கார்கள் எல்லாம் வேற லெவல்ல மாற போகுது...
இந்தியாவில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் விரைவில் தங்கள் கார்களை எல்லாம் அப்டேட் செய்யும் முடிவில் இருக்கின்றனர். இந்த கார்களின் பட்டியலை காணலாம் வாருங்கள்.

இந்தியா ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் முக்கியமான மார்கெட், இங்கு ஏராளமான சர்வதேச பிராண்ட்கள் வந்து தங்கள் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. இப்படியாக இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தாங்கள் விற்பனை செய்யும் கார்களை அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், மார்கெட்டில் போட்டிக்கு வரும் கார்களுக்கு டஃப் போட்டியைக் கொடுப்பதற்காகவும் இந்த அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அப்டேட் செய்யப்பட்ட காரை அவ்வப்போது அறிமுகம் செய்வார்கள். ஆனால் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ எக்ஸ்போவின் போது வெளியிடப்படும். அந்த காலகட்டத்தில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு கார்களில் பல அப்டேட்களை செய்து அறிமுகப்படுத்தி மக்களின் கவனத்தைப் பெறுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது விரைவில் அப்டேட்களை பெற உள்ள கார்களை பற்றித் தான்

டாடா
டாடா நிறுவனம் இந்தியாவின் முக்கியமான ஒரு நிறுவனம். இந்நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் வெளிப்புற தோற்றத்தில் சில மாற்றங்களைச் செய்து வருகிறது. வரும் 2023ம் ஆண்டு இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

இந்த அப்டேட்டில் புதிய அம்சங்களாக 360 டிகிரி கேமரா, ஏடிஏஸ், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆகியன இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் டாடா பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி
இந்தியாவில் விற்பனை ரீதியில் மிகப்பெரிய கார் நிறுவனம் மாருதி தான். இந்நிறுவனம் 2023ம் ஆண்டிற்கு பல அப்டேட்களை லைன்அப் செய்து வைத்திருக்கிறது. அதன் படி 2 புதிய கார்கள் அறிமுகமாகிறது. இது போக இந்நிறுவனத்தின் பலருக்கு பிடித்த காரான ஸ்விஃப்ட் புதிய அப்டேட்டை பெறவிருக்கிறது.

இது போக மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் தலா ஒரு காரை களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் தான் இந்நிறுவனம் பிரெஸ்ஸா காரை அப்டேட் செய்தது. இது போக அடுத்த ஆண்டு கிராண்ட் விட்டாரா காரின் விற்பனையை அதிகப்படுத்தத் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.

ஹூண்டாய்
தென்கொரியா நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனம் தனது லைன் அப்பில் ஏற்கனவே உள்ள பல கார்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு ஹூண்டாய் க்ரெட்டா, வெர்னா, ஆகிய கார்கள் அப்டேட் செய்யப்படவுள்ளன.

இதில் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள கார் இந்த கார் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டுச் சிறப்பான விற்பனையில் இருக்கும் கார்.

வெர்னாவை பொருத்தவரை மிட்-சைஸ் செடான் செக்மெண்ட கார். இந்த கார்களை வாங்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த இந்த அப்டேட் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக எம்பிவி செக்மெண்டில் ஸ்டார்கேஸர் கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








