2022 இல் இந்தியாவில் அறிமுகமாகிய டாப் ஹைபிரிட் கார்கள்... எல்லாமே வேற லெவல்ல மைலேஜ் கொடுக்க கூடியவை!

இந்தியாவில் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இவை அதிகம் மைலேஜ் தரக் கூடியவையாக உள்ளன. பெட்ரோலில் இயங்கும் மோட்டாருடன் சேர்த்து மின்சாரத்தால் இயங்கும் மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டிருப்பதே இதன் அதிக மைலேஜ் திறனுக்குக் காரணமாக உள்ளது.

இந்த மின் மோட்டாருக்கான மின்சாரம் பேட்டரியின் வாயிலாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பேட்டரி பேக் காரின் இயக்கத்தின் வாயிலாகவே சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதேவேளையில், சில ஹைபிரிட் கார்களில் இந்த பேட்டரி பேக்கை சார்ஜ் செய்வதற்கு என தனியாக சார்ஜிங் வசதி வழங்கப்படுகின்றன. பேட்டரியிலும் இவை இயங்கும் என்பதால் வழக்கமான எரிபொருளில் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் இவற்றில் இருந்து வெளியாகும் மாசு பல மடங்கு குறைவாக இருக்கும்.

ஹைபிரிட் கார்

மேலும், எரிபொருளின் பயன்பாடும் இந்த காரில் குறைவாகவே இருக்கும். இத்தகைய குணாதியசங்களை ஹைபிரிட் கார்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் தற்போது அவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. வரவேற்பு அதிகம் என்பதால் அவற்றின் அறிமுகமும் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 2022 ஆம் ஆண்டை அலங்கரிக்கும் வகையில் நாட்டில் அறிமுகமாகிய மிக சிறந்த ஹைபிரிட் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross)

2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகமாகிய மிக சிறந்த ஹைபிரிட் கார் என டொயோட்டா இன்னோவா ஹைகிராஸைக் கூறலாம். பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற கார் மாடலாக கருதப்படும் இன்னோவாவை அதிகம் மைலேஜ் தரும் வாகனமாக டொயோட்டா உருவாக்கி இருக்கின்றது. இதற்காக காரின் இயக்கத்தின் வாயிலாகவே சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையே இந்த காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதன் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீட்டருக்கும் அதிகம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார் மாடலை வழக்கமான பெட்ரோல் மோட்டார் தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது. இதன் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றாக 16 கிமீட்டராக உள்ளது. நேற்றைய தினமே (டிசம்பர் 28) இந்த காரின் விலை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு ரூ. 18.30 லட்சமும், உயர் நிலை வேரியண்டிற்கு ரூ. 28.97 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன. டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)

மாருதி சுஸுகி தரமான சம்பவம் என்றே இதை கூறலாம். இந்த காரை டொயோட்டா உடனான கூட்டணியின் கீழே மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது மிட் சைஸ் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவிலேயே மிக அதிகம் மைலேஜ் தரும் எஸ்யூவி காரும் இதுவே ஆகும். இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 27.97 கிமீ வரை செல்லும். இதற்கு இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புதிய அட்வான்ஸ்ட் ஹைபிரிட் தொழில்நுட்பமே முக்கிய காரணமாக உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடனேயே ஹைபிரிட் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரை வெறும் அதிகம் மைலேஜ் தரும் வாகனமாக மட்டுமே மாருதி சுஸுகி உருவாக்கவில்லை. இதனை அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த வாகனமாகவும் அது உருவாக்கி இருக்கின்றது. பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்று இன்னும் பல அம்சங்களைக் கொண்டதாகவே மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ஆண்டின் மிக சிறந்த ஹைபிரிட் வருகையாக இது உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Hyryder)

மாருதி சுஸுகி உடனான கூட்டணியின் கீழ் எப்படி அந்த நிறுவனத்திற்காக கிராண்ட் விட்டாரா உருவாக்கப்பட்டதோ அதேபோல், டொயோட்டாவிற்காக உருவாக்கப்பட்டதே அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஹைபிரிட் கார். இரு கார்களும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் தொழிற்நுட்ப கருவிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மைலேஜ் திறனும் இரண்டிலும் ஒரே மாதிரியானதாக உள்ளது. ஆம் இந்த கார் மாடலும் லிட்டர் ஒன்றிற்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும். லேசான உருவ மாற்றங்களுடன் இரு கார்களும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City eHEV)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்களில் ஹோண்டா சிட்டி இ:எச்இவி-யும் ஒன்று. 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஹைபிரிட் கார்களில் இதுவும் ஒன்று. ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 125 பிஎச்பியையும், 253 என்எம் டார்க் திறன்களையும் வெளியேற்றும். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் மோட்டார் இரண்டும் இணைந்து வெளியேற்றும் திறன் இதுவாகும். இதன் உச்சபட்ச மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 26.5 கிமீ ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2022, 10:18 [IST]
English summary
List of hybrid cars launched in this year
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+