அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம்... பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க...

இந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அறிமுகமாகவுள்ள கார்களின் பட்டியலை காணப்போகிறோம் வாருங்கள்

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

பண்டிகை காலங்கள் நெருங்கவதை முன்னிட்டு ஆட்டோமொபைல் துறையில் அடுத்தடுத்த புதிய கார்கள் அறிமுகமாகத் துவங்கியுள்ளன. அந்த வரிசையையில் அடுத்தடுத்த வாரங்கள் ஸ்கோடா, மெர்சிடீஸ் பென்ஸ், டாடா, ஃபோக்ஸ்வாகன், மாருதி சுசூகி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகத்திற்குத் தயாராகி வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் முதல் பண்டிகை காலங்கள் துவங்கும் நிலையில் ஜூன் மாதத்திற்குள் புதிய கார்களை அறிமுகப்படுத்தினால் அந்த கார்களின் விற்பனை பண்டிகை காலங்களில் சூடுபிடிக்கும் எனக் கருதி கார் நிறுவனங்கள் வரிசையாக கார்களை அறிமுகத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அந்த கார்களின் பட்டியலைக் காணலாம்

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

ஸ்கோடா குஷாக் மோன்டே கார்லோ

ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் மாடலில் டாப் ஸ்பெக் மாடலாக இந்த குஷாக் மோன்டே கார்லோ கார் அறிமுகமாகிறது. இது ஸ்கோடா குஷாக் காரிலிருந்து சிறு மாற்றங்களுடன் அறிமுகமாகிறது. வெளிப்புற காஸ்மெட்டிக்ஸில் கருப்பு நிறத்துடனும், முன்புறம் கருப்பு கிரில் மற்றும் கருப்பு பம்பர் உடனும், 17 இன்ச் அலாய் வீலுடனும் அறிமுகமாகிறது. மோன்டே கார்லோ பேட்ஜ் காரின் முகப்பு ஃபென்டரில் பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உட்புறம் மிகப்பெரிய அப்டேட்டாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கருப்பு மற்றும் சிவப்பு கலந்த டூயல் டோன் அப்ஹோல்சரி, டேஷ்போர்டு, கதவுகள், சென்டர் கன்சோல் ஆகிய பகுதிகளில் சிவப்பு நிற அசெண்ட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

மெர்சிடீஸ் பென்ஸ் -சி - கிளாஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் W206 தலைமுறையின் புதிய சி - கிளாஸ் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது. புதிய சி கிளாஸ் காரில் பழைய காரிலிருந்து பல மாறுதல்களைப் பெற்றுக் கிட்டத்தட்ட எஸ் கிளாஸ் காரின் லுக்கில் இருக்கிறது. காரின் உட்புறம் போர்ட்ரேட் வடிவிலான டேப்லெட் ஸ்டைல் டச் ஸ்கிரீன், ஃபிளோட்டிங் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், புதிய ஸ்டியரிங் வீல், ஆகிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 197 எச் திறனுடனும், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 245 எச்பி திறனுடனும், அதே 2.0 லிட்டர் டர்போ இன்ஜின் 194எச் பி திறனுடனும் விற்பையாகிறது. அனைத்து இன்ஜின்களும் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

டாடா நெக்ஸான் இவி - அதிக ரேஞ்ச்

அதிக ரேஞ்ச் கொண்ட டாடா நெக்ஸான் இவி கார் கடந்த ஏப்ரல் மாதமே அறிமுகமாகவேண்டியது. ஆனால் தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக இதன் அறிமுகம் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த கார் அடுத்த சில நாட்களில் அறிமுகமாகவுள்ளது. பழைய நெக்ஸான் இவியிலிருந்து இந்த காருக்கு இருக்கும் மிகப்பெரிய மாற்றம் என்பது பேட்டரி பேக் தான் பழைய காரில் 30.2kWh பேட்டரி பேக் இருந்தது. இந்த காரில் 40kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பழைய காரிலிருந்த ரேஞ்சான 312 கி.மீ என்பது புதிய அதிக ரேஞ்ச் காரில் 400 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 6.6kW சார்ஜர் கொடுக்கப்படுகிறது. அதே போல இந்த காரில் வென்டிலேட்டட் சீட்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், பார்க் மோட், இஎஸ்சி உள்ளிட்ட பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

பிஎம்டபிள்யூ ஐ4

பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஐ4 செடான் காரை காட்சிப்படுத்தியது. இந்த கார் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஐசிஇ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. இந்த கார் eDrive40 மற்றும் M50 xDrive ஆகிய இரண்டு வேரியண்ட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் eDrive40 கார் பின் பக்க ஆக்ஸிலில் மோட்டார் பொருத்தப்பட்டு 340 எச்பி பவர் மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. M50 xDrive வேரியண்ட் ஆல்வீல் டிரைவ் காராக 544 எச்பி மற்றும் 795 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இரண்டு காரிலும் 80.7kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 590 கி.மீ வரை பயணிக்குமாம்

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

ஜூப் மெரிடியன்

ஜூப் நிறுவனம் மெரிடியன் எஸ்யூவி காருக்கான புக்கிங்கை துவங்கிவிட்டது. இந்த காருக்கான விலை மே மாத இறுதியில் வெளியாகி கார் ஜூன் மாத இறுதியில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூப் நிறுவனத்தின் காம்பஸ் காரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வீதி கூடிய உயரம் கூடிய வீல் பேஸ் உள்ளது. இதன் வடிவமைப்பில் காம்பஸை விட மாறுபாடுகள் தெரியும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறம் கம்பஸ் கார்போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடனும், அதே நேரத்தில் FWD எனப்படும் முன்பக்க வீல் டிரைவ், AWD எனப்படும் அனைத்து பக்க வீல் டிரைவ் ஆப்ஷன்களுடனும் விற்பனைக்கு வருகிறது.

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

ஃபோக்ஸ்வாகன் விர்டூஸ்

ஃபோக்ஸ்வாகன் வென்டோ காரின் இடத்தை நிரப்ப அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்தான் விர்டுஸ், இந்த கார் வழக்கமான ஃபோக்ஸ்வாகன் கார்களின் டிசைன் தரத்தைப் பெற்றுள்ளது. அதே போல இதன் உட்புற கட்டமைப்பு ஃபோக்ஸ்வாகன் டைகுன் காரை போலவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் லைன் ஆகிய 2 ஆப்ஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டைனமிக் லைன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் உடனும் பெர்ஃபாமென்ஸ் லைன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் உடனும் விற்பனைக்கு வருகிறது.

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

அப்டேட்டட் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிட்டு வந்த விட்டாரா பிரெஸ்ஸா காரில், விட்டாரா என்ற பெயரை நீக்கி விட்டு பிரெஸ்ஸா என்ற பெயரில் காரை அறிமுகப்படுத்தி வருகிறது. 2022ம் ஆண்டிற்கான பிரெஸ்ஸொ கார் பல மாற்றங்களுடன் வரவிருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் புதிய பாடி பேனல் மாற்றப்படுகிறது. உட்புறத்தில் நல்ல குவாலிட்டியான டேஷ்போர்டு, மாருதியின் ஸ்மார்ட் ப்ரோ இன்ஃபோடெயின்மெண்ட் சாஃப்ட்வேர், கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பம், 360 டிகிரி கேமரா, பெடல் ஸிப்டர், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், 6 ஏர் பேக்கள், உள்ளன. இந்த கார் 1.5 லிட்டர் கே15சி டூயல் ஜெட் இன்ஜினும் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. அதற்காக 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி வேரியண்டும் அடங்கும்

அடுத்தடுத்த வாரங்களில் ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் . . . பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க . . .

ஹூண்டாய் வென்யூ பேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் நிறுவனம் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வென்யூ காரை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டெஸ்ட் செய்யப்படும்போது பலரால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த காரின் கான்செஃப்ட் எஸ்யூவி ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் பாராமெட்ரிக் கிரில் உடன் புதிய ஸ்பிலிட் ஹெட்லைட், மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க, பின்பக்க பம்பர்கள் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும் இதில் கேபினில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களும் இடம் பெறுகிறது. ஆனால் பெரும்பாலும் கேபின் பழைய மாடலில் உள்ள டிசைனில் உள்ளபடியே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2022, 11:12 [IST]
English summary
List of new cars planned to launch in 2022 may and june
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+