இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம்....

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் உள்ள டாப் 10 கார்களை இங்கே காணலாம்.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் தசரா, தீபாவளி எனத் தொடர் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள் பலர் கார்களை வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். இதனால் பண்டிகை காலங்களில் கார்களின்விற்பனை அதிகரிக்கும். இந்தியாவில் தற்போது எஸ்யூவி செக்மெண்ட்டில் உள்ள கார்கள் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

இந்த செக்மெண்டில் மாருதி மற்றும் டாடா நிறுவனம் தீவிரமாகப் போட்டிப் போட்டு வருகின்றனர். டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் நல்ல ஹிட் அடித்துள்ள நிலையில் இந்த இரு கார்களும் எஸ்யூவி கார்கள் விற்பனையில் முதலிடத்தை மாறி மாறி பிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் நாள் கடந்த அக்டோபர் மாதம் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

டாடா நெக்ஸான்

கடந்த சில மாதங்களாக இந்த செக்மெண்டில் மாருதி பிரெஸ்ஸா கார் சிறப்பான விற்பனையைப் பெற்று முதலிடத்திலிருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் டாடா நெக்ஸான் கார் மீண்டும் மாருதி பிரெஸ்ஸாவை கீழ தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. டாடா நிறுவனம் மொத்தம் 13,767 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. என்னதான் முதலிடத்திலிருந்தாலும் செப்டம்பர் மாத விற்பனையான 14,518 என்ற விற்பனையை ஒப்பிடும் போது அக்டோபரில் விற்பனை குறைவு தான்.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரதானமான கார் இது தான். இந்த காரின் விற்பனை தொடர்ந்து சீராக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது இந்த கார் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 11,880 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் 12,866 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

டாடா பஞ்ச்

டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரும் மக்கள் பலரால் விரும்பப்படும் ஒரு காராக இருக்கிறது. அந்த கார் அறிமுகமாகும் போது இருந்தே சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 10,982 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் மாதம் 12,251 கார்கள் விற்பனையாகியிருந்தது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

மாருதி பிரெஸ்ஸா

மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா காரில் புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்திய நிலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நம்பர் 1 இடத்தில் இந்த கார் இருந்தது. தற்போது 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 9,941 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த செப்டம்பர் மாதம் 15,445 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒரே மாதத்தில் விற்பனையில் 5500 கார்கள் குறைந்துள்ளன.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

கியா செல்டோஸ்

கியா நிறுவனத்தின் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் கார் இந்த செல்டோஸ் தான். இது நேரடியாக ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக மார்கெட்டில் களம் இறங்கப்பட்டது. இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் 9777 கார்கள் இந்த அக்டோபர் மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 11,000 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் நிறுவனமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது வென்யூ காரை அப்டேட் செய்து புதிய தலைமுறை காராக வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மாருதி பிரெஸ்ஸா கார் வந்துவிட்டதால் இதன் விற்பனை சற்று மந்தமாகத் தான் இருந்தது. ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 9585 வென்யூ கார்களை கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 11,033 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

மஹிந்திரா பொலிரோ

என்னதான் புதிதாகப் பல கார்கள் வந்தாலும் மஹிந்திராவின் பொலிரோ காருக்கு இன்னும் மவுசு குறையவேயில்லை. இந்நிறுவனம் மொத்தம் 8772 பொலிரோ கார்களை கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 8108 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

மாருதி கிராண்ட் விட்டாரா

இந்த செக்மெண்டில் டாப் 10 பட்டியலில் புதிதாக நுழைந்துள்ள கார் கிராண்ட் விட்டாரா இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் தான் அறிமுகமாகியது. விற்பனை துவங்கிய முதல் மாதத்திலேயே டாப் 10 பட்டியலுக்குள் வந்துவிட்டது. மாருதி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 8052 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கிரெட்டா, செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

கியா சோனட்

கியா நிறுவனத்தின் இரண்டாவதாகச் சிறப்பாக விற்பனையாகும் கார் இந்த கியா சோனட் கார் தான். இந்த கார் மார்கெட்டில் உள்ள நெக்ஸான், பிரெஸ்ஸா மற்றும் வென்யூ ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. இந்நிறுவனம் மொத்தம் 7614 சோனட் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் 9291 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் எதுன்னு சொல்லுங்க பாப்போம் . . . .

மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ எஸ்யூவி கார் கடந்த மாதம் விற்பனையான எஸ்யூவி கார்களில் டாப் 10 பட்டியலில் 10 இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 7438 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை என்பது அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்கார்பியோ- என் காரையும் சேர்த்துத் தான். இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 9536 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 4, 2022, 13:03 [IST]
English summary
List of top 10 SUV cars sold in October 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+