மாருதிக்கு இங்கே இடம் கிடையாது... வாடிக்கையாளர்களுக்கு நல்ல சர்வீஸை வழங்கும் டாப் 3 நிறுவனங்கள் இது தான்
தங்களிடம் கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியான அனுபவத்தைக் கொடுத்ததில் எம்ஜி நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.
தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கார் விற்பனைக்கு பிறக்காகச் சேவை வழங்கியதில் 1000 புள்ளிகளுக்கு 881 புள்ளிகளைப் பெற்று எம்ஜி நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.

ஜேடி பவர் மற்றும் நீல்சன்ஐக்யூ ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் கார் தயாரிப்பாளர்கள் காரை விற்பனை செய்த பின்பு வழங்கும் சர்வீஸ் குறித்த ஒரு ஆய்வை நடத்தி வருகிறது. இந்த ஆய்வு 20 சதவீதம் டெலிவரி புரோசஸ், 18 சதவீதம் டீலரிடம் உள்ள வசதிகள், 17 சதவீதம் பேப்பர் ஒர்க், 15 சதவீதம் டீலர்கள் வழங்கும் டீல், 15 சதவீதம் சேல்ஸ் கன்சல்டென்ட், மற்றும் 14 சதவீதம் அந்த பிராண்டின் வெப்சைட் ஆகிய விஷயங்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வு மாஸ் மார்கெட் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஆஃப்டர் சேல்ஸ் -சர்வீஸ் குறித்து நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 1000 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். அதில் எத்தனை மதிப்பெண்களை ஒரு நிறுவனம் பெறுகிறதோ அதன் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி இந்தாண்டிற்கான ஆய்வு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சொந்தமாக கார் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் இந்தியா முழுவதுதிலுமிருந்து மொத்தம் 6618 வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஆய்வில் மொத்தம் 881புள்ளிகள் பெற்று எம்ஜி நிறுவனம் முதலிடத்திலும், 878 புள்ளிகள் பெற்று டொயோட்டா நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 872 புள்ளிகள் பெற்று ஹூண்டாய் நிறுவனம் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. எம்ஜி நிறுவனம் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 27 சதவீத வாடிக்கையாளர்களுக்கு டீலர்களுடனான கமர்ஷியல் என்கேஜ்மெண்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களின் டீலர்களிடம் இந்த பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ இந்த ஆய்வில் டாப்3 பட்டியலில் எம்ஜி, டொயோட்டா ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களே இருக்கின்றன. அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி இதில் டாப் 3யில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








