எதிர்பார்ப்பு எல்லாம் எகிறிப் போய் கிடக்குது... இந்த 3 கார்களுக்காக காத்துக் கிடக்கும் ரசிகர்கள்...
இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பில் விரைவில் அறிமுகமாகவுள்ள டாப் 3 கம்பேக்ட் எஸ்யூவி கார்களை பற்றித் தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.
இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கான மவுசுதான் அதிகமாகியுள்ளது. மற்ற ரக கார்களின் விற்பனை மந்தமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் வரும் 2023 ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடக்கவுள்ளது. இந்த நிகழ்வின்போது பல நிறுவனங்கள் தங்களது புதிய எஸ்யூவி, ஹேட்ச்பேக், செடான் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளனர். இதில் புதிய எஸ்யூவி ரக கார்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் டாப் 3 கம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்களைத் தான் இங்கே காணப்போகிறோம்.
மாருதி சுஸூகி ஜிம்னி

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ள ஒரு கார் தான் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஜிம்னி கார். இந்த கார் 2023ம் ஆண்டு விற்பனைக்கே வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இது அறிமுகப்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கார் 5 டோர் கொண்ட காராக வடிவமைக்கப்படுகிறது. இந்த கார் 1.5 லிட்டர் கே15சி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும்.
இது 101 பிஎச்பி பவரையும் 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த காரில் ஆல் கிரிப் ப்ரோ ஆல் வீல் டிரைவ் செட்டபை ஸ்டாண்டர்டாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி சுஸூகி ஒய்டிபி

மாருதி நிறுவனம் இந்த காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த காரின் புரோடெக்ஷன் வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும், குறிப்பாக ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்திவிடும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த ஒய்டிபி கார் மாருதியின் பலேனோவை மையப்படுத்திய கூபே எஸ்யூவி காராக இருக்கும்.
இதில் உள்ள இன்ஜினும் பலேனோ காரின் இன்ஜினே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் டாடா பஞ்ச், சிட்ரோன் சி3 என மார்கெட்டில் நல்ல பெயர்களை எடுத்த கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இதன் ஹையர் ஸ்பெக் வெர்ஷனில் டர்போ பெட்ரோல் இன்ஜினும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி
இந்தியாவில் குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல மவு இருக்கும் இருக்கும் நிலையில் ஹூண்டாய் புதிய மைக்ரோ எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இது டாடா பஞ்ச் காருக்கு மார்கெட்டில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து இந்த செக்மெண்டில் ஹூண்டாய் போட்டிக்கு புதிய காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் கே1 பிளாட்ஃபார்மில் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
ஹூண்டாயின் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி காரை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை எப்பொழுது அறிமுகப்படுத்துகிறது என்ற தகவலை ஹூண்டாய் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








