இந்திய மக்கள் குடும்பத்தோடு இந்த கார்களுக்காக தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்... !
இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளுடன் விரைவில் அறிமுகமாகவுள்ள டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியலைத் தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

இந்திய மார்கெட்டில் யூட்டிலிட்டி வாகனங்களுக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் ஒன்றாகப் பயணிக்கவும், பயணங்களின் போது அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லவும் இந்த கார்கள் வசதியாக இருப்பதால் இந்த கார்களை இந்தியர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். அந்த வரிசையில் இந்த செய்தியில் இந்தியாவில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் புதிய எம்பிவி கார்களின் டாப் 5 பட்டியலைப் பார்க்கப்போகிறோம்.

ரெனால்ட் டிரைபர் டர்போ
ரெனாலாட் டிரைபர் கார் டர்போ இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த கார் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அறிமுகம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மார்கெட்டில் ரெனால்ட் கார்களில் விற்பனை சீராக இல்லாமல் மேலும் கீழுமாக இருப்பது அந்நிறுவனத்திற்குத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த காரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தாமதமாக நடந்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரைஸ்டா
டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை இன்னோவா க்ரைஸ்டா காரை வடிவமைத்து வருகிறது. இந்த காரும் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள இன்னோவா க்ரைஸ்டா கார் லேடர் பிரேம் ஒர்க் என்ற என்ற தளத்தில் உருவாக்கப்படுகிறது. இதை மாற்றி மோனோகோக்யூ கட்டமைப்பில் இந்த காரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த கார் ஹைபிரிட் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது என்றும் செய்திகள் பரவலாகப் பரவி வருகிறது.

டொயோட்டா ரூமியன்
டொயோட்டோ நிறுவனம் மாருதி எர்டிகா காரை ரீ பேட்ஜிங் செய்து டொயோட்டா ரூமியன் என்ற பெயரில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளது. எர்டிகா காரிலிருந்து சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து இந்த காரை வெளியிடுகிறது. இந்த காரை பார்க்கும் போது அச்சு அசலாக எர்டிகா கார் போலவே தோற்றமளிக்கும் இந்த காரின் அறிமுகத்திற்காகவும் பலர் காகத்துக்கெண்டிருக்கிறார்கள்

ஹூண்டாய் ஸ்டார்கேஸர்
ஹூண்டாய் நிறுவனம் ஸ்டார்கேஸர் என்ற எம்பிவி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. கியா கேரன்ஸ் காரின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ந்து அந்த காரின் வடிவமைப்பிலேயே இந்த காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே இந்தோனேசியாவில் விற்பனையாகி வருகிறது. தற்போது இந்திய மார்கெட்டில் எம்பிவி கார்களுக்கு உள்ள நல்ல வரவேற்பை ஹூண்டாய் நிறுவனமும் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

கியா - கார்னிவல்
கியா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கார்னிவல் காரின் புதிய தலைமுறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த காரின் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்றாலும் இந்த கார் அறிமுகமாக அதிக வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த புதிய தலை முறை காரில் ஹைபிரிட் அல்லது பிளக் இன் ஹைபிரிட் பவர்டெரைன் ஆப்ஷன்கள் இந்த காரில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








